ஆட்டோக்களில் GPS கருவியுடன் கூடிய கட்டண மீட்டரை பொருத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!!
ஆட்டோக்களில் GPS கருவியுடன் இணைந்த கட்டண மீட்டர்களை பொறுத்தக்கோரிய மனுவில் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. ஆட்டோக்களில் GPS கருவியுடன் இணைந்த கட்டண மீட்டர்களை பொறுத்துவது தொடர்பாக 2013 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
2014 ஆம் ஆண்டு சென்னையிலும், பின்னர் தமிழகம் முழுவதும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆறு ஆண்டுகள் முன்பு பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை அமல்படுத்தக்கோரி ராஹத் பாதுகாப்பு சமுதாய அறக்கட்டளை சார்பில் அதன் செயலாளர் சுரேந்தர் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படாததால் பயணிகள் பாதுகாப்பு சிக்கல் இருப்பதாகவும், அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை தொடர்வதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் மாதம் ஒத்திவைத்து உத்தரவ்ட்டுள்ளது.