ஏகாம்பரநாதர் ஆலய புனரமைப்புப் பணியில் முறைகேடு நடைபெறவில்லை: சென்னை உயர் நீதிமன்றம்

Madras HC On Temple Renovation Case: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் புதுப்பிக்கும் பணியில் முறைகேடு செய்ததாக இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் கவிதா மீது தொடரப்பட்ட  வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 15, 2022, 10:18 PM IST
  • காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வழக்கில் இருந்து விடுதலையானார் கவிதா
  • காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் புதுப்பிக்கும் பணி வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
  • ஆலய புனரமைப்புப் பணியில் முறைகேடு நடைபெறவில்லை
ஏகாம்பரநாதர் ஆலய புனரமைப்புப் பணியில் முறைகேடு நடைபெறவில்லை: சென்னை உயர் நீதிமன்றம்  title=

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் புதுப்பிக்கும் பணியில் முறைகேடு செய்ததாக இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் கவிதா மீது தொடரப்பட்ட  வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் நடைபெற்ற  புதுப்பிக்கும் பணிக்காக அரசு 2 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியதாகவும், கோவில் இணைய தளம் வாயிலாக பக்தர்களிடம் இருந்து வசூல் செய்த பணத்தை இந்து சமய அறநிலையத்துறை திருப்பணி திருப்பணிக்காக பயன்படுத்தாமல் முறைகேடு செய்ததாக காஞ்சிபுரம் மாஜிஸ்ட்ரேட்ட நீதிமன்றத்தில் ஏ.டில்லிபாபு என்பவர் புகார் ஒன்றை தாக்கல் செய்தார். மேலும், அரசு நிதியிலும் முறைகேடு செய்ததாகவும்  கூறியிருந்தார்.

புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய மாஜிஸ்திரேட்டு பிறப்பித்த உத்தரவின்படி, இணை ஆணையர் கவிதா உள்ளிட்டோர் மீது சிவகாஞ்சி காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.  வழக்கு நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்த போது  புகார்தாரர் டெல்லிபாபு தரப்பில் யாரும் ஆஜராக வில்லை.

 

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், டெல்லிபாபு கொடுத்த புகாரை முறையாக ஆய்வு செய்யாமல், இணை ஆணையர் கவிதா மீது வழக்குப்பதிவு செய்ய மாஜிஸ்திரேட்டு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கவிதா உள்பட அரசு அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அரசு பணி செய்யும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பு அரசிடம் முறையான அனுமதியை பெற வேண்டும் என கூறியுள்ளார். 

மேலும் படிக்க | EPFO News: இனி இவர்களுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்

புகார் கொடுத்த டெல்லி பாபு கோவிலுக்கு சொந்தமான கடையில் உள்வாடகையில் இருந்த  நிலையில் கடையில் இருந்து வெளியேற்றியதால், உள்நோக்கத்துடன் இணை ஆணையர் கவிதா மீது புகார்  அளித்துள்ளதாகவும் அரசு ஊழியர்கள் தங்களது பணியை எந்த வித பயமும் இல்லாமல் மேற்கொள்ள வேண்டும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 

அதற்காகவே அவர்கள் மீது இதுபோல வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பு அரசிடம் முறையான அனுமதியை பெறவேண்டும் என்று குற்றவியல் விசாரணை முறைச் சட்டப்பிரிவு கூறுவதாக தெரிவித்துள்ள நீதிபதி இணை ஆணையர் கவிதா மீது  சிவகாஞ்சி போலீசார் பதிவு செய்த  வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். 

கோவிலை புதுப்பிக்க பக்தர்களிடம் இருந்து நன்கொடை வசூலித்ததாக எழுந்துள்ள  குற்றம்ச்சாட்டு குறித்து இரண்டு உயர் அதிகாரிகள் கொண்ட  உயர்மட்ட விசாரணை குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்ட நீதிபதி குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பது கண்டறியப்பட்டால் இணை ஆணையர் கவிதா மீது இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் , ஆணையர்  நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | நீட் தேர்வில் இடஒதுக்கீட்டுக் கொள்கை! அரசிடம் பதில் கோரும் உச்ச நீதிமன்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News