சென்னை: இன்று காலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற "ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு" என்ற மாநாட்டில் கலந்துக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டை தொடங்கி வைத்தார். மேலும் இந்த மாநாட்டில் ரூ.2,120.54 கோடி மதிப்பீட்டில் 41,695 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 24 தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதனையடுத்து தமிழ்நாட்டில் உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு "ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு" மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், 'மேட் இன் இந்தியா' போல 'மேட் இன் தமிழ்நாடு' என்ற குரல் உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்க வேண்டும் என்றார். அதுவே தமிழக அரசின் ஆசை, லட்சியம். இந்த லட்சியத்தை நோக்கி எங்கள் பயணம் நிச்சயமாக அமையும் என்றார்.
தமிழகம் ஏற்றுமதியில் மேலும் முன்னிலை பெற தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்படும் விரைவில் அமைக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தினார்.
ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு" என்ற மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR