கரூர்: லோக்சபா தேர்தலுக்கான வாக்குபதிவு தொடங்கியது! வரிசையாக வாக்களித்த காவல்துறை

கரூரில் லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. காவல்துறையினர் வரிசையில் நின்று  தபால் மூலம் வாக்கு செலுத்தி தங்களது ஜனநாயக கடமையை ஆர்வத்துடன் வாக்களித்தனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 13, 2024, 12:21 PM IST
  • கரூர் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது
  • காவல்துறையினர் வாக்கு செலுத்துகின்றனர்
  • சென்னையிலும் தபால் வாக்குப்பதிவு தொடக்கம்
கரூர்: லோக்சபா தேர்தலுக்கான வாக்குபதிவு தொடங்கியது! வரிசையாக வாக்களித்த காவல்துறை title=

லோக்சபா தேர்தல் 2024

இந்திய பிரதமரை தேர்வு செய்யும் லோக்சபா தேர்தல் 2024 நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பல கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் புதுச்சேரி, தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று இருகிறது. ஏற்கனவே தபால் வாக்குப்பதிவுகள் தொடங்கிவிட்டன.

மேலும் படிக்க | மோடி, அண்ணாமலை போட்ட ஷோ எல்லாம் தமிழ்நாட்டில் எடுபடவில்லை - கலாநிதி வீராச்சாமி

கரூரில் தபால் வாக்குப்பதிவு

கரூரில் தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள், தங்கள் வாக்குரிமையை செலுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, காவலர்கள் இன்று முதல் தங்கள் தபால் வாக்குகளைச் செலுத்தலாம் என்று மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் தபால் வாக்குகள் செலுத்தும் வகையில் தனி அறை ஒதுக்கப்பட்டது. அதில் காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், ஊர் காவல் படையினர் என அனைவரும் தங்களது ஆர்வத்துடன் வரிசையில் வரிசையில் நின்று வாக்கினை பதிவு செய்து சீல் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் செலுத்தினர். தபால் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தினை கரூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான தங்கவேல் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் சென்னையில் காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.

தீவிர தேர்தல் பிரச்சாரம்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 17 ஆம் தேதி மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. அதற்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருப்பதால் அனைத்து தொகுதிகளில் இருக்கும் வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்களுக்கு வெளியில் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தாலும், அதனையும் பொருட்படுத்தாமல் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் பிரச்சாரம் செய்த நிலையில், கோயம்புத்தூரில் ராகுல் காந்தி இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி தமிழ்நாடு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக இருக்கும் என்பதில் பெரும் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தார்.

வாக்கு எண்ணிக்கை 

ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவு ஜூன் 4 ஆம் தேதி நாடு முழுவதும் எண்ணப்படுகின்றன. அதன்படி பார்க்கும்போது தமிழ்நாட்டு மக்கள் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள ஏறத்தாழ 45 நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. அதுவரை தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளும் இருக்கும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | கோவில்பட்டியில் பிரச்சாரத்தின்போது கட்சி நிர்வாகியை திட்டிய வைகோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News