மக்களவை தேர்தல் தேதி இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது!!
மக்களவை தேர்தல் எப்போது என்பது குறித்த அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தேர்தல் அணையம் அறிவித்துள்ளது. இன்று மாலை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர, ஒரிசா, சிக்கிம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. மேலும் தமிழகத்திலும் மிக முக்கியமானதாக கருதப்படும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பிலோ அல்லது அதன் பிறகோ முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Election Commission of India to hold a press conference at 5pm today. pic.twitter.com/M8hrrpQBr4
— ANI (@ANI) March 10, 2019
நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்ட நிலையில் தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ளது. இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படலாம் என ஒரு தகவலும், 10 -கட்டங்களாக நடத்தப்படலாம் என மற்றொரு தகவலும் கூறுகின்றன.
ஒடிசா, சிக்கிம் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான தேதியும் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தமிழகத்தில் உள்ள 21 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதியும் இன்று அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.