தேர்தல் பத்திரம்: அதிமுகவுக்கு அதிக நன்கொடை கொடுத்த சிஎஸ்கே... திமுகவுக்கு யார் தெரியுமா?

Electoral Bonds: தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுக, அதிமுக கட்சிகள் யார் யாரிடம் இருந்து அதிக நன்கொடைகளை பெற்றார்கள் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Written by - Sudharsan G | Last Updated : Mar 17, 2024, 05:23 PM IST
  • தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
  • திமுக தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.656.5 கோடியை பெற்றுள்ளது.
  • அதிமுக அதன் மூலம் ரூ.6 கோடியை வசூலித்துள்ளது.
தேர்தல் பத்திரம்: அதிமுகவுக்கு அதிக நன்கொடை கொடுத்த சிஎஸ்கே... திமுகவுக்கு யார் தெரியுமா? title=

Electoral Bonds: தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் சில நாள்களுக்கு முன் அந்த தகவல்கள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, எஸ்பிஐ அளித்த தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் கடந்த மார்ச் 14ஆம் தேதி வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அன்று வெளியான தகவல்களின்படி, தனிநபரோ அல்லது நிறுவனமோ யார் எவ்வளவு தொகையை தேர்தல் பத்திரங்கள் மூலம் அளித்தார்கள், எந்தெந்த கட்சிகள் எந்த நிறுவனத்திடம் இருந்து எவ்வளவு பெற்றது என்பது குறித்து அப்போது தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், அரசியல் கட்சிகளால் சீலிடப்பட்ட கவரில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த தேர்தல் பத்திர தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது.

மேலும் படிக்க | ரூ. 6,601 கோடியுடன் பாஜக முதலிடம்... திமுக, அதிமுகவுக்கு எத்தனையாவது இடம்? - தேர்தல் பத்திரம் டேட்டா

சிஎஸ்கே - அதிமுக

இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக, அதிமுக யார் யாரிடமிருந்து எவ்வளவு பெற்றார்கள் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.656.5 கோடியை திமுக திரட்டிய நிலையில், அதில் ரூ.509 கோடியை லாட்டரி மார்டினின் Future Gaming நிறுவனம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல், அதிமுக தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.6 கோடியை திரட்டிய நிலையில், அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் மட்டும் ரூ. 5 கோடி வழங்கப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது. 

முன்னதாக, தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ. 6,060 கோடியை பாஜக திரட்டியிருக்கிறது. குறிப்பாக, அதில் 2019-20 காலகட்டத்தில் மட்டும் ரூ.2,555 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்டுள்ளது. திரிணாமுல் ரூ.1,610 கோடியும், காங்கிரஸ் ரூ.1,422 கோடியும் தேர்தல் பத்திரங்கள் திரட்டியுள்ளது. இதுவரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதியை பெற்ற பாஜக எவ்வளவு தொகையை யாரிடம் இருந்து பெற்றுள்ளது என தகவல் வெளியாகவில்லை. 

பாஜக 50%

2018ஆம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் மூலம் 50 சதவீதம் தொகையை பாஜகவே பெற்றுள்ளது. அதாவது, 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை 16 ஆயிரத்து 518 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்டது. அதில், பாஜக மட்டும் ரூ.8,250 கோடியை திரட்டியுள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை ரூ.6,060 கோடியும், 2018-19இல் மட்டும் ரூ.2,190 கோடியும் பெற்றுள்ளது. 

2018ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்தியது. கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரங்களை தடை செய்த நிலையில், அதுகுறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கும்படியும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தேர்தல் பத்திரம் விவரங்கள் வெளியீடு... சந்தேகத்தை கிளப்பும் நன்கொடைகள்...!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News