Hazeena Syed Posts Condolences For Elangovan Prior His Death : காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, 75 வயதாகும் இவர், இன்று காலை 10:30 மணியளவில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானார்!
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினராக பதவியில் இருந்தவர், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். இவர், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக இருந்ததை அடுத்து, மக்களவை உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்துள்ளார். சுமார் 15 நாட்களுக்கும் மேலாக நுரையீரல் நோய் பாதிப்பு காரணமாக இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாட்களாக நுரையீரல் சலி காரணமாக மூச்சுத்திணரல் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி, இன்று காலை உயிரிழந்திருக்கிறார்.
மரண செய்தியில் சர்ச்சை!
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உயிரிழந்ததாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம், தங்களது மெடிக்கல் ரிப்போர்டை 10:30 மணியளவில் வெளியிட்டது. ஆனால், மகிளா காங்கிரஸ் அணி தலைவர் ஹசீனா சையத், அந்த செய்தி வருவதற்கு 1 மணி நேரம் முன்பே இரங்கல் பதிவை வெளியிட்டிருக்கிறார்.
அதில், “ஒருவர் மரணம் எய்தும்போது, அவர் தம் உடைமைகளைத் தன் வீட்டில் விட்டுச் செல்கிறார், தன் உறவினரைத் தன் கல்லறையருகே விட்டுச் செல்கிறார். அவர் தன்னுடன் எடுத்துச் செல்கின்ற ஒரே விஷயம் தான் செய்த காரியங்களை மட்டும்தான்!! உங்கள் புகழ் இந்த வையகம் இருக்கும் வரை!! தலைவர் இ வி கே எஸ் இளங்கோவன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்..Rest in Peace” என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவு, அவர் இறப்பிற்கு முன்கூட்டியே வெளியாகியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்னொரு இடைத்தேர்தல்?
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வே.ரா தனது பதவிக்காலத்தில் காலமானார். இதையடுத்து, 2023ஆம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்றார், இளங்கோவன். இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியில் இருந்தார். தற்போது இவரும் உயிரிழந்திருப்பதை தொடர்ந்து மீண்டும் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கலாம் என கூறப்படுகிறது.
திருமாவளவன் இரங்கல்!
இளங்கோவன் காலமாகியிருப்பதை தொடர்ந்து, தமிழகத்தின் மூத்த அரசியல் கட்சி தலைவர்கள் பலர் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விசிக தலைவர் திருமாவளவன், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தன்மீது மிகுந்த பற்றுதலைக் கொண்டிருந்தவர் என குறிப்பிட்டிருக்கிறார். மேலும், “அவ்வப்போது தொடர்பு கொண்டு என்னை ஊக்கப்படுத்தியவர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல்
மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடியவர். அவருடைய மறைவு தமிழக அரசியல் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இருந்த பதவிகள்:
1984ஆம் ஆண்டில் சத்தியமங்கலம் தொகுதியில் வெற்றியடைந்து முதன்முறையாக எம்.எல்.ஏ ஆனார்.
1996-2011ஆம் ஆண்டு வரை, தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பில் இருந்தார். பின்னர், 2014-2017 வரை அதே பொருப்பில் இருந்தார்.
2004ஆம் ஆண்டில் எம்.பி ஆகவு, ஜவுளித்துறை இணை மந்திரியாகவும் இருந்திருக்கிறார்.
2003-ல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைட்த்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்
2023-ல் அதே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் எம்.எல்.ஏ ஆனார்.
மேலும் படிக்க | காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ