குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து முதல்வரிடம் அறிக்கை தாக்கல்

குரங்கணி வனப்பகுதி தீ விபத்து குறித்து தமிழக முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செயப்பட்டது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 13, 2018, 04:00 PM IST
குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து முதல்வரிடம் அறிக்கை தாக்கல் title=

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் டிரக்கிங் சென்ற 36 பேர், அங்கு திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கியாதல், இதில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரணை நடத்த வேளாண்மை துறையின் முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமித்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட அதுல்ய மிஸ்ரா, அந்த விசாரணை அறிக்கையை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தாக்கல் செய்தார் அதுல்ய மிஸ்ரா. இந்த அறிக்கை 125 பக்கங்கள் கொண்டதாக இருந்தது.

வனத்துறையினரின் கவனக்குறைவும், முறையான பயிற்சி இல்லாதவர்கள் மலையேற்றத்திற்கு சென்றதும் தான் விபத்துக்கு காரணம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Trending News