3 ஆண்டுகளாக கோமாவில் இருந்து மீளாத இளைஞர்..! தவறான சிகிச்சையால் ஏற்பட்ட விபரீதம்..!

தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் கடந்த மூன்று ஆண்டுகளாக கோமா நிலையில் உள்ள இளைஞரின் குடும்பம் தற்போது நிர்க்கதியாக நிற்கிறது. 

Written by - Yuvashree | Last Updated : Jul 21, 2023, 01:49 PM IST
  • கிருஷ்ணகிரியை சேர்ந்த இளைஞர், ஓசூருக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
  • அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொண்டபோது அதிகமான மயக்க மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
  • இதனால் அவர் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.
3 ஆண்டுகளாக கோமாவில் இருந்து மீளாத இளைஞர்..! தவறான சிகிச்சையால் ஏற்பட்ட விபரீதம்..! title=

ஓசுரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் இளைஞர் ஒருவர் 3 ஆண்டுகளாக கோமாவில் உள்ளார். இதனால் அவரது குடும்பம் ஆதரவின்றி நிற்பதாக கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரி இளைஞர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கலைஞர் நகரில் வசித்து வருபவர் மனோகரன். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகன் சுமனுக்கு 27 வயது ஆகிறது. இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து அங்கேயே தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.  அங்கு அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சிலர், சுமனை அதே நிறுவனத்தின் மருத்துவமனையில்  சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு சுமனுக்கு தவறுதலாக அறுவைசிகிச்சை  கூடுதலாக மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | சென்னையில் கடந்த 14 நாளில் 10 கொலைகள்! கொலை நகரமாக மாறி வரும் தலைநகரம்

மூன்று ஆண்டுகளாக கோமா..!

தவறான முறையில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால், சுமனின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக கோமா நிலையிலேயே இவர் இருப்பதாக கூறப்படுகிறது. சுமனை, அவரது குடுத்தார் இன்று வரை மிகவும் சிரமப்பட்டு பராமரித்து வருகின்றனர்.

நீதிமன்றத்தில் வழக்கு..

தங்கள் மகனின் இந்த நிலைக்கு காரணமான மருத்துவமனை மீது, இளைஞரின் குடும்பத்தினர் பெங்களூரில் உள்ள ஒரு வழக்கறிஞர் மூலம் நூகர்வோர்  நீதிமன்றத்தை நாடி தனியார் மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

அந்த வழக்கின் தீர்ப்பில் சம்பந்தப்பட்டவர்கள் இளைஞரின் குடும்பத்திற்கு 15 லட்சம் தரவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  ஆனால் இளைஞரின் வயது 24.  இதனை கருத்தில் கொண்டு 80 லட்சம் வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை வைத்திருக்கின்றனர். இதையடுத்து, இது குறித்து கம்பெனியா கம்பெனி நிர்வாகமோ இன்றுவரை இளைஞர் கண்டு கொள்ளவே இல்லை என சுமனின் குடும்பத்தார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மனவேதனை..

இளம் வயதில் இவ்வாறு கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சுமனின் பெற்றோர் மற்றும் அவரின் தங்கை மிகுந்த வேதனையுடன் உள்ளதாக கூறுகின்றனர். மேலும், தனியார் மருத்துவமனையின் மருத்துவ சிகிச்சை அலட்சியத்தால் வேறு எவருக்கும் இது போன்ற பாதிப்புகள் வரக்கூடாது என்றும் அவர்கள் பேசியுள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞருக்கு போதிய நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று சுமனின் குடும்பத்தார் வசிக்கும் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

மேலும் படிக்க | காணாமல் போன 10ஆம் வகுப்பு மாணவி கல்குவாரி குட்டையில் சடலமாக மீட்பு..! நடந்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News