கரூரில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கரூர் பாரளுமன்ற தொகுதி அமைப்பாளர் கேபி ராமலிங்கம் கலந்து கொண்டார். அப்போது பேசிய பாஜக பொறுப்பாளர் கேபி ராமலிங்கம், 39 நாடளுமன்ற தொகுதிகளிலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தாமரை சின்னத்தை வெற்றி பெற செய்ய பணியாற்றுவோம் என தெரிவித்தார். தற்போது திமுக தோல்வி பயத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | குஜராத் துறைமுகத்திலிருந்து தான் போதைப் பொருட்கள் வருகிறது: அமைச்சர் எ.வ.வேலு
"வரும் 19 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சேலம் வருகை தர உள்ளார். அவர் கலந்து கொள்ளும் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் படலாம். அப்படி அறிவிக்கபடும் போது அது வேட்பாளர்கள் அறிமுக கூட்டமாக கூட இருக்கலாம். கரூர் உள்ளிட்ட 39 நாடளுமன்ற தொகுதிகளிலும் நரேந்திரமோடி தலைமையை ஏற்று தாமரை சின்னத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். அந்த நோக்கத்துடன் அனைவரும் பணி ஆற்ற வேண்டும். நாட்டு மக்களை மட்டுமல்ல அரசாங்கத்தை மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழக இனத்தையே சீரழிக்கும் கட்சியாக திமுக மாறி விட்டது." என கேபி ராமலிங்கம் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய கேபி ராமலிங்கம், ஏற்கனவே வாங்கிய வெள்ள நிவாரன நிதிக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார். பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வெற்றி வெற வேண்டும் என்பதற்காக மோடி தமிழகம் வருகிறார் என்று கூறிய அவர், அதை செய்து காட்டுவோம் என சவால் விட்டார். மேலும், திமுக வுக்கு தான் தோல்வி பயம் வந்துவிட்டதாகவும், பாரளுமன்ற தேர்தலில் 39 இடங்களில் வெற்றி பெறுவோம் என்பதன் அடிப்படையில் தான் தேர்தலை சந்திக்கிறோம் என்றும் கேபி ராமலிங்கம் கூறினார்.
செந்தில் பாலாஜி கோட்டை கரூர் மாவட்டம் ஆகும். ஆனால் அவர் இப்போது சிறையில் இருக்கும் நிலையில் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது பாஜக. அவருடைய சொந்த மாவட்டத்திலேயே பாஜக கொடி பறக்க வேண்டும் என்ற நோக்கில் கட்சி வேலைகளை தொய்வில்லாமல் செய்து கொண்டிருக்கிறது. அத்துடன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் சொந்த மாவட்டம் என்பதால் இம்முறை அந்த தொகுதியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் பாஜக இருக்கும் நிலையில், அதிமுகவும் அந்த தொகுதியில் பலமாக இருக்கிறது. இதனால், கரூர் தொகுதியில் யார் கொடி பறக்கப்போகிறது? என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
மேலும் படிக்க | “நடிகை குஷ்பு முதலமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” மாநில மகளிரணி செயலாளர் ப.ராணி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ