கொடநாடு எஸ்டேட் ஊழியர் தற்கொலை!

Last Updated : Jul 4, 2017, 11:59 AM IST
கொடநாடு எஸ்டேட் ஊழியர் தற்கொலை!  title=

கொடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்த ஊழியர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கோத்தகிரி அருகேயுள்ள கொடநாடு எஸ்டேட் அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தவர் தினேஷ் குமார் (28). தினேஷ் குமாருக்கு, சில தினங்களுக்கு முன் பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

கடந்த 3 தினங்களாக அலுவலகம் செல்லாமல் விடுப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் முற்றத்தில் அவர் துணியால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கோத்தகிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மர்மம் நீடிக்கும் நிலையில் தற்போது ஊழியர் தற்கொலை செய்து கொண்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், தற்கொலைக்கும் வழக்குக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

மன உளைச்சலால் தான் தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Trending News