தலித் சாமியாரின் எச்சில் உணவை வாங்கி சாப்பிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ

சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தலித் சாமியாரின் எச்சில் உணவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. வாங்கி சாப்பிட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 27, 2022, 02:12 PM IST
  • தனியார் பள்ளியில் அம்பேத்கர் ஜெயந்தி விழா மற்றும் ஈத் பண்டிகை
  • நமது எல்லாருடைய சாதி ஒன்றே, அது மனிதாபிமானமாகும்' என்றார்.
தலித் சாமியாரின் எச்சில் உணவை வாங்கி சாப்பிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ title=

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் ஜமீர் அகமதுகான். பெங்களூரு பாதராயனபுராவில் ஒரு பள்ளியில் அம்பேத்கர் ஜெயந்தி மற்றும் ஈத்மிலாத் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பெங்களூரு சாம்ராஜ்பேட்டை தொகுதி காங்கிரஸ் ஜமீர் அகமதுகான் தலைமை தாங்கினார். மேலும் தலித் சமுதாயத்தை சேர்ந்த சாமியாரான நாராயண சுவாமியும் கலந்து கொண்டார். பின்னர் துப்புரவு தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜமீர் அகமது கான், சாதி மற்றும் மதத்தை விட மனிதாபிமானமும், சகோதரத்துவமும் தான் பெரியது.

மேலும் படிக்க | மனவளர்ச்சி குன்றிய மாணவியை அடித்து சூடு வைத்த ஆசிரியை!

 

 

நமது எல்லாருடைய சாதி ஒன்றே, அது மனிதாபிமானமாகும்' என்றார். அப்போது மேடையில் நின்றபடி பேசிய ஜமீர் அகமதுகான், அங்கு வைக்கப்பட்டு இருந்த உணவை எடுத்து சாமியாரான நாராயண சுவாமியின் வாயில் ஊட்டி விட்டார். பின்னர் சாமியாரின் வாயில் இருந்து அந்த எச்சில் உணவை எடுத்து ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ. சாப்பிட்டார். சாமியாரின் வாயில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜமீர் அகமதுகான் உணவை எடுத்து சாப்பிடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு சில பாராட்டுகள், சில விமர்சனங்கள் என கலவையான எதிர்வினைகள் வந்துள்ளன. தீண்டாமையை ஒழிக்கும் எண்ணத்துடன் எம்எல்ஏ செய்த செயல் சிறப்பானது என சிலர் கருத்து கூறினாலும், மேலும் சிலர் இது போன்ற ஸ்டன்ட் செயல்கள் வெறும் பரபரப்புக்காக செய்வது என விமர்சித்துள்ளனர்.

மேலும் படிக்க | மாவட்ட ஆட்சியரின் பெயரில் மோசடி செய்யும் மர்ம கும்பல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News