ஆளுநர் ரவி மூலம் தமிழ்நாட்டில் மத மோதலை உருவாக்க பாஜக திட்டம் - கபில் சிபல்

ஆளுநர் ரவி தமிழகத்தில் மத மோதலை ஏற்படுத்த அனுப்பப்பட்டவர் என சமாஜ்வாடி கட்சியின் எம்பியும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 13, 2023, 02:50 PM IST
  • தமிழ்நாட்டில் மத மோதலை உருவாக்க திட்டம்
  • ஆளுநர் ஆர்.என்.ரவி மூலம் பாஜக செய்கிறது
  • மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் டெல்லியில் பேட்டி
ஆளுநர் ரவி மூலம் தமிழ்நாட்டில் மத மோதலை உருவாக்க பாஜக திட்டம் - கபில் சிபல் title=

சனாதனம் சர்ச்சை

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மைக்காலமாக செல்லும் இடங்களில் எல்லாம் சனாதன தர்மம் தான் சிறந்தது. அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ச்சியாக பேசி வந்தார். மேலும், வள்ளலாரும் சனாதனி என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனென்றால் அவர் சனாதனத்தில் இருக்கும் சாதி வேறுபாடுகளுக்கு எதிராக தான் ’சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்’ என்ற நெறியை உருவாக்கி, அனைவரும் சமம், பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பிக்கக்கூடாது என போதித்தார். அவரை சனாதனி என எப்படி கூறலாம் என தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலர் ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். அப்போது இருந்து சனாதனம் குறித்த பேச்சு பொதுவெளியில் எழத் தொடங்கியது.

மேலும் படிக்க | திமுகவை குறி வைக்கும் பாஜக: ரெய்டுகள் மூலம் முக்கிய புள்ளிகளுக்கு குறி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இதன் தொடர்ச்சியாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது டெங்கு, மலேரியா போன்றது சனாதனம், அதனை கட்டாயம் ஒழிக்க வேண்டும் என்று பேசினார். அதாவது சாதிய வேறுபாடுகளையும், பிறப்பால் ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதனை பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என பேசிவிட்டதாக வட மாநிலங்களில் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதுடன், உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

பாஜகவின் அரசியல் பிரச்சாரம்

உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு தான் இப்போது பாஜகவின் அரசியல் பிரச்சாரமாக வட மாநிலங்களில் இருக்கிறது. இந்து மதத்துக்கு எதிராக பேசிவிட்டதாகவும், கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் மதத்தை இப்படி பேச முடியுமா? என்றும் பொதுவெளியில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு விளக்கம் அளித்திருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறப்பால் மனிதனை இழிவுபடுத்தும் முறை எந்த மதத்தில் இருந்தாலும் அதனை கட்டாயம் ஒழிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் இதனையெல்லாம் மறைத்து அரசியல் களத்தில் இந்தியா கூட்டணிக்கு எதிராக தீவிரமான வதந்திகள் பரப்பப்பட்டுக் கொண்டிருகிகன்றன.

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் விளக்கம்

இது குறித்து பேசியிருக்கும் மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், தமிழகத்தில் நிலவும் மத அரசியல் பிரச்சனைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியே காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, " முதலில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவிடம் கவர்னர் (ஆர்.என்.) ரவி என்ன செய்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்க விரும்புகிறேன். உங்களுக்குத் தெரியும்.

ஏனென்றால். தமிழகத்தில் இதுவரை மதம் சார்ந்த சர்ச்சை இல்லை. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் அங்கு ஆட்சி செய்து, ஆட்சி நடத்துகின்றனர். அங்கு நீங்கள் ஆர்.என்.ரவியை அனுப்புவதன் குறிக்கோள் மதத்தின் அடிப்படையில் சர்ச்சையை ஏற்படுத்துவது. இதுபோன்ற பிரச்னைகளை எழுப்பும் பாஜகவினர் நீங்கள் தான் குற்றவாளிகள். அவர்களின் அரசியல் கொள்கைகளை ஆளுநர் முன்னெடுத்துச் செல்கிறார்." என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க | “பொய், புரட்டு, திட்டமிட்ட அவதூறு” என பாஜகவின் திசைதிருப்பும் தந்திரத்தை முறியடிப்பீர் -முதல்வர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News