தனியாக இருக்கும் பெண்களை குறிவைக்கும் ‘தில்லாலங்கடி திருடன்’

ரகசிய காதலியுடன் சொகுசு வாழ்க்கை அனுபவிக்கக் கடையில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட ‘டிப் டாப் திருடன்’ போலீசில் சிக்கியது எப்படி ?

Written by - Gowtham Natarajan | Last Updated : Apr 15, 2022, 08:40 PM IST
  • தனியாக இருக்கும் பெண்களை குறிவைக்கும் நகை திருட்டு
  • ரகசிய காதலிக்காக செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்
  • 9 பெண்களிடம் கைவரிசை காட்டிய ‘தில்லாலங்கடி திருடன்’
தனியாக இருக்கும் பெண்களை குறிவைக்கும் ‘தில்லாலங்கடி திருடன்’  title=

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெண்கள் வீட்டை விட்டு வெளிய வர அச்சமடைந்து கிடக்கிறார்கள். காரணம் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் உள்ள கடைகளில் தனியாக வேலை பார்க்கும் பெண்களை குறிவைத்து மர்ம நபர் ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபடுவது அதிகரித்துப்போனது. இதில், செயினை பறி கொடுத்த பெண்கள் போலீசில் புகாரளிக்க வழக்குப்பதிவு செய்து விசாரணையும் தொடங்கப்பட்டது. அப்போதுதான் மீண்டும் ஒரு திருட்டு சம்பவம் அரங்கேறி அதிர்ச்சி கொடுத்தது.

இதே பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் டிப்டாப்பாக டூவிலரில் வந்த வாலிபர் ஒருவர், பொருட்கள் வாங்குவது போல பாவலா காட்டியிருக்கிறார். குட்டிப்போட்ட பூனை போல கடை முன் நகர்ந்து கொண்டே இருந்தவர், கண்ணிமைக்கும் நேரத்தில் பெண்ணின் கழுத்தில் கையை வைத்தார். அவ்வளவுதான் சிக்கிய தங்க செயினை பறித்துக்கொண்டு உடனே அங்கிருந்து தப்பியோடினார். எவ்வளவோ முயன்றும் அவரை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து செயினை பறிகொடுத்த பெண் போலீசில் புகாரளித்தார். சம்பவ இடத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் டிப்டாப் திருடனை பிடிக்க தனிப்படை அமைத்தனர். மாவட்டம் முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. திருட்டில் ஈடுபட்டது கட்டாயம் உள்ளூர் ஆளாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வந்தனர். போலீசார் இந்த கணிப்பு உடனே பழித்துப்போனது. 

Chain Snatching

கருங்கல் பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்த வாகனத்தை வாலிபர் ஒருவர் ஓட்டி வருவதை கண்டு உஷாரானார்கள். அங்கிருந்த அனைவரும் அலார்ட் செய்யப்பட்டு வாலிபர் நெருங்கும் வரை மவுனம் காத்த போலீசார், தக்க சமயம் பார்த்து சுற்றி வளைத்தனர். பிடித்த கையோடு வாலிபரை கருங்கல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். முன்னுக்கு பின் குதர்க்கமாக்க பதளித்தவரிடம் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொள்ளப் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. 

Chain Snatching

போலீசில் பிடிபட்டவர் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்தவர் 28-வயதான ஆன்றோ சுபின். பி.ஏ பட்டதாரியான இவர்தான் செயின் பறிப்பில் ஈடுபட்ட ‘தில்லாலங்கடி திருடன்’என்பது உறுதியானது. அழகிய மண்டபம் பகுதியில் அக்வேரியம் கடை நடத்தி சராசரி மனிதனை போல வாழ்க்கையைக் கடத்தியவரைத் திருமணத்தை மீறிய தகாத உறவுதான் போலீசில் சிக்க வைத்தது. தனது பக்கத்து ஊரைச் சேர்ந்த பெண் ஒருவருடன் ஆன்றோவுக்கு தாகத பழக்கம் ஏற்பட்டுள்ளது.வீட்டை விட்டு வெளியேறி அந்த பெண்ணுடன் வாழத் தொடங்கியவருக்கு அரசுப் பணி மீது ஆசை உண்டானது. அதற்காக இரண்டு வருடத்திற்கு முன்பு 5-லட்ச ரூபாய் வட்டிக்கு வாங்கி புரோக்கர் ஒருவரிடம் கொடுத்ததாகவும் அவர் வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது. 

Chain Snatching

மேலும் படிக்க | ஹோட்டல் மேலாளரை கொடூரமாக தாக்கும் ரவுடிகள் - பதறவைக்கும் வீடியோ

இதற்கிடையே, வருமானம் இல்லாததால் வேலைக்கு வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியாமல் தலைமறைவானார். இந்த நிலையில்தான் ஆன்றோவின் புத்தி அவரை கொள்ளைக்காரனாக மாற்றியது. கடந்த ஒரு வருடமாக கடையில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பு ஈடுபட்டுள்ளார். நகைகளை விற்று வரும் பணத்தில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதும் ரகசிய காதலியுடன் சொகுசு காரில் சொகுசாக சுற்றுவதுமாக இருந்திருக்கிறார். இதுவரை 9 பெண்களிடம் தன்னுடைய கைவரிசை காட்டியிருக்கிறார். இதனையடுத்து ஆன்றோ சுபின்ஐ கைது செய்த கருங்கல் போலீசார் அவரிடம் இருந்து 30-சவரன் தங்க நகை, 1-சொகுசு கார் மற்றும் டூவிலரை பறிமுதல் செய்தனர். இப்படியாகச் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட ஆன்றோ சுபின் சிறையில் சொற்ப வாழ்க்கையை வாழ தொடங்கிவிட்டார்....

மேலும் படிக்க | மீண்டும் தீ பிடித்த இ-பைக்: பேட்டரி வெடித்ததால் ஷோரூமில் தீ விபத்து

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News