Kanimozhi: அதிமுகவுக்கு ஆதரவாக பேசிய கனிமொழி - பாஜக சீன்லையே இல்ல

Kanimozhi: தமிழ்நாட்டில் திமுகவுக்கு அடுத்த இடத்தில் அதிமுக தான் இருப்பதாகவும், இந்த இரு கட்சிகளுக்கும் இடையே மட்டுமே தேர்தலில் நிதர்சனமான போட்டி இருக்கும் என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 4, 2024, 05:21 PM IST
  • திமுகவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது அதிமுக மட்டுமே
  • தேர்தல் களத்தில் அவர்களுக்கு வாக்கு வாங்கி இருக்கிறது
  • பாஜகவின் சித்து வேலைகள் எல்லாம் இங்கு எடுபடாது - கனிமொழி
Kanimozhi: அதிமுகவுக்கு ஆதரவாக பேசிய கனிமொழி - பாஜக சீன்லையே இல்ல title=

தமிழ்நாட்டில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் தான் போட்டி என பாஜக தலைவர்கள் தொடர்ச்சியாக கூறி வந்தனர். குறிப்பாக அதிமுகவை விட அதிக வாக்கு சதவீதம்  பாஜக பெற்றுவிட்டதாகவும், வரும் தேர்தலில் அது நிரூபணமாகவும் என கூறி வருகின்றனர். ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என கனிமொழி கூறியிருக்கிறார். திமுகவுக்கு அடுத்த இடத்தில் அதிமுக இருப்பதை மறுக்க முடியாத உண்மை என தெரிவித்துள்ளார். திராவிட கட்சி, திராவிட கொள்கைகளை கொண்ட கட்சியாக பார்க்கும்போது அது திமுக மட்டுமே, அதிமுக திராவிட கொள்கைகள் அடிப்படையில் செயல்படுவதில்லை என்றும் கனிமொழி கூறியுள்ளார்.

மேலும் படிக்க | பிரதமர் இந்த காரணத்திற்காக தான் தமிழகம் வருகிறார் - முதல்வர் ஸ்டாலின்!

பல்வேறு மக்கள் விரோத சட்டங்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான மசோதாக்கங்கள் நாடாளுமன்றத்தில் வரும்போது, அதனை அதிமுக எதிர்க்காமல் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்ததாகவும், அதனடிப்படையில் பார்க்கும்போது அதிமுகவை எப்படி திராவிட கட்சி? திராவிட சிந்தாந்தம் கொண்ட கட்சி என கூற முடியும் என கனிமொழி கூறியுள்ளார். பாஜகவுக்கு தமிழ்நாட்டின் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லை  என தெரிவித்திருக்கும் கனிமொழி, தமிழ்நாட்டு மக்கள் மீது கரிசனம் கொண்டவர்களாக இருந்தால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் ஒரு சல்லி பைசா காசைக் கூட தமிழ்நாட்டுக்காக ஒதுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

மாநில நிதியில் இருந்தே புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்து கொண்டிருப்பதாக கூறியிருக்கும் கனிமொழி,  இது பெரு மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கும் தெரியும் என கூறினார். மேலும், பாஜகவினர் தொடர்ச்சியாக தமிழ்நாடு வளரவில்லை என குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருந்தால் வளர்ச்சியடையாத மாநிலமான தமிழ்நாட்டுக்கு தானே அதிக நிதி ஒதுக்க வேண்டும்?, பாஜகவின் ஆட்சியால் வளர்ச்சியடைந்த உத்தரப்பிரதேசத்துக்கு எதுக்கு அதிக நிதியை  ஒதுக்குகிறார்கள்?, அதவும் தமிழ்நாடு கொடுக்கும் வரியை அம்மாநிலத்துக்கு தாரை வார்க்கிறார்கள் என கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜகவினர் கூறும் வாதங்களின் அடிப்படையில் உத்தரப்பிரதேசம் வளர்ச்சியடைந்த மாநிலமாக இருந்தால் அவர்கள் கொடுக்கும் வரி ஒரு ரூபாய்க்கு எதற்கு 3 ரூபாயை திருப்பிக் கொடுக்கிறார்கள், தமிழ்நாடு ஒரு ரூபாய் வரி கொடுத்தால் வெறும் 29 பைசாவை மட்டுமே கொடுக்கிறார்கள் என்றும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். அதனால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் திமுக கூட்டணியை மகத்தான வெற்றியை பெறச் செய்வார்கள் என்றும் தூத்துக்குடி எம்பியும், திமுக  துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | மாணவிகள், ஆசிரியைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கல்லூரி முதல்வரை கைது செய்யக்கோரி போராட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News