S.P.பாலசுப்ரமண்யம் உடல்நலம் குறித்து கவலையை வெளிப்படுத்திய நண்பர் கமல்ஹாசன்

எஸ்.பி. பாலசுப்பிரமண்யம் (SPB) நலமாக இருக்கிறார் என சொல்ல முடியாது. ஆபத்தான நிலையில் உள்ளார் என எஸ்.பி.பியின் நண்பர் கமல்ஹாசன் (Kamal Haasan) தெரிவித்துள்ளார்

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 25, 2020, 01:36 AM IST
  • எஸ்.பி. பாலசுப்பிரமண்யம் (SPB) நலமாக இருக்கிறார் என சொல்ல முடியாது: கமல்ஹாசன்.
  • பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமண்யத்தை எம்ஜிஎம் மருத்துவமனையில் நேரில் சென்று கமல் பார்த்தார்.
  • ஆகஸ்ட் 5 ஆம் தேதி எஸ்.பி பாலசுப்பிரமண்யம் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
S.P.பாலசுப்ரமண்யம் உடல்நலம் குறித்து கவலையை வெளிப்படுத்திய நண்பர் கமல்ஹாசன் title=

Kamal Haasan Talk about SPB Health Condition: நடிகர் மற்றும் அரசியல்வாதியான கமல்ஹாசன், பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமண்யத்தை (SP Balasubrahmanyam) சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் நேற்று (வியாழக்கிழமை) அவரை நேரில் சென்று பார்த்தார். அவர் மருத்துவமனை செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, எஸ்.பி.பாலசுப்ரமண்யத்தின் உடல்நிலை மோசமடைந்து செய்கை சுவாச ஆதரவில் இருப்பதாக செய்திகள் வந்தன. டாக்டர்கள் அவரை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக மருத்துவமனையின் அறிக்கை தெரிவிக்கிறது. இதைத் தொடர்ந்து, எஸ்.பி.பியின் நண்பரும் நலம் விரும்பியுமான கமல்ஹாசன் (Kamal Haasan) அவரை சென்னையில் உள்ள மருத்துவமனையில் சந்தித்தார்.

ஆதாரங்களின்படி, எஸ்.பி. சரண் (SP Charan) தனது தந்தையின் உடல்நிலை குறித்து கமல்ஹாசனுக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலை அடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார். 

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமண்யத்தை சந்தித்து காரில் செல்லும் போது, செய்தியாளர்கள் அவரிடம், SPB உடல்நிலை குறித்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த கமல், அவர் நலமாக இருக்கிறார் என சொல்ல முடியாது. ஆபத்தான நிலையில் உள்ளார் எனக் கூறியுள்ளார்.

ALSO READ | #GetWellSoon: திரும்பி வா... எழுந்து வா.. எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்காக தொடரும் பிரார்த்தனை!

அவர் விரைவாக குணமடைய வேண்டும் என பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக ஊடகங்கள் (Social Media) மூலம் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி எஸ்.பி பாலசுப்பிரமண்யம் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்ட் 13 ஆம் தேதி அவரது நிலை மோசமடைந்தது, அதன் பிறகு அவர் வென்டிலேட்டர் மற்றும் ஈசிஎம்ஓ (Extracororeal Membrane Oxygenation) ஆதரவில் வைக்கப்பட்டார்.

Trending News