தி.மு.க தலைவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நோய் தொற்றும் குறைந்து வருகின்றது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!
தி.மு.க. தலைவர் கருணாநிதி வயது முதிர்வு மற்றும் உடல் நிலை காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 வருடங்களாக ஓய்வில் இருப்பதால் தீவிர அரசியலில் இருந்து அவர் ஒதுங்கி இருக்கிறார். அவரது தொண்டையில் ட்ரக்கியாஸ்டமி கருவி பொருத்தப்பட்டிருப்பதால் பேச முடியாத நிலையில் அவர் இருக்கிறார். அவ்வப்போது, சென்னை காவேரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அவர் வந்து செல்கிறார்.
கடந்த 18 ஆம் தேதி காவேரி மருத்துவமனைக்கு வந்தார். ட்ரக்கியாஸ்டமி சிகிச்சையில் பழைய குழாய் அகற்றப்பட்டு 4 வது முறையாக அவருக்கு புதிய குழாய் பொருத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவருக்கு காய்ச்சல் இருப்பதாக செய்திகள் வெளிவந்த நேரத்தில் நேற்று இரவு மருத்துவர்களும், செவிலியர்களும் கோபாலபுரம் இல்லம் சென்று அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த தகவலை அறிந்த திமுக தொண்டர்கள் அனைவரும் கோபாலபுரம் இல்லத்திற்கு வெளியில் அலைமொதினர். இதையடுத்து, கட்சித்தலைவர்கள் அனைவரும் கோபாலபுரம் இல்லத்திற்கு நேரில் சென்று நலம்விசாரித்து வந்தனர். இதையடுத்து, இவர் பூரண குணமடைய வேண்டும் என்று இறைவனை பிராத்திப்பதாகவும் ட்விட்டரில் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். அப்போது அவர் கூறியதாவது..! தி.மு.க தலைவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் நோய்தொற்றும் குறைந்து வருகின்றது.
He (M Karunanidhi) is recovering steadily as his fever is coming down: DMK Working President MK Stalin pic.twitter.com/X0VB3tCXM3
— ANI (@ANI) July 27, 2018
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் திமுக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு மருத்துவ உதவி வழங்க முன்வந்த பிரதமர் மோடிக்கு நன்றி. கருணாநிதிக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் குணமடைந்து, தனது குரலில் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பார் என ஸ்டாலின் பேசியுள்ளார்.