நடிகர் சூரி வீட்டு திருமண விழாவில் நகை திருட்டு!

மதுரையில் பிரபல சினிமா நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமண நிகழ்ச்சியில் 10 பவுன் தங்க நகைகள் திருட்டு - சிசிடிவி காட்சி கொண்டு போலீசார் விசாரணை.  மதுரை சிந்தாமணி பைபாஸ் ரோட்டில் வேலம்மாள் மருத்துவமனைக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இங்கு கடந்த 9-ம் தேதி நகைச்சுவை நடிகர் சூரியின் உறவினர் இல்ல திருமணம் நடந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 13, 2021, 04:37 PM IST
நடிகர் சூரி வீட்டு திருமண விழாவில் நகை திருட்டு! title=

மதுரையில் பிரபல சினிமா நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமண நிகழ்ச்சியில் 10 பவுன் தங்க நகைகள் திருட்டு - சிசிடிவி காட்சி கொண்டு போலீசார் விசாரணை.  மதுரை சிந்தாமணி பைபாஸ் ரோட்டில் வேலம்மாள் மருத்துவமனைக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இங்கு கடந்த 9-ம் தேதி நகைச்சுவை நடிகர் சூரியின் உறவினர் இல்ல திருமணம் நடந்தது.  

siva

இதற்காக நடிகர் சூரி உள்பட திரையுலக பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். இவ்விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டார். அப்போது யாரோ மர்ம நபர்கள் மணமகள் அறைக்குள் புகுந்து அங்கிருந்த 5 பவுன் கவர்னர் மாலை, 3 பவுன் தங்க நெக்லஸ், 2 பவுன் பிரேஸ்லெட் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.  இது தொடர்பாக திருமண மண்டப மேலாளர் சூரியபிரகாஷ் (வயது 47) என்பவர் கீரைத்துறை குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார்.  இதனடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிவு செய்து, திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் கொண்டு விசாரணை நடத்தி வருகிறார். 

தற்போத நடிகர் சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் செங்கல்பட்டு பகுதியில் நடைபெற்றது.  இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  சூரி சம்பத்தப்பட்ட காட்சிகள் முடிந்த நிலையில் இன்றும் விஜய் சேதுபதி சம்பந்தப்பட் காட்சிகள் மீதம் உள்ளன.  விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

soori

ALSO READ விஜய்சேதுபதியை தொடர்ந்து சீண்டும் நாம் தமிழர் கட்சியினர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News