ஜெ.,மரணம்: டிடிவி தினகரன் சார்பில் பென் டிரைவ் விசாரணை ஆணையத்தில் சமர்ப்பிப்பு

ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. 

Last Updated : Jan 2, 2018, 05:46 PM IST
ஜெ.,மரணம்: டிடிவி தினகரன் சார்பில் பென் டிரைவ் விசாரணை ஆணையத்தில் சமர்ப்பிப்பு title=

ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருகிறது. 
 
ஏற்கனவே விசாரணை கமிஷன் முன்பு ஜெயலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், திமுக சரவணன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள், மகன் ஆனா தீபா மற்றும் தீபக் ஆகியோரும்  ஆஜராகி விளக்கம் அளித்து உள்ளனர்.

ஜெ., மரணம்: விசாரணை ஆணையத்திற்கு 6 மாத கால அவகாசம்!

இந்நிலையில், இன்று ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா. மேலும் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சார்பாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி ஜெயலலிதா சிகிச்சை பெறும் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை ஒப்படைத்து விளக்கம் அளித்தார். 

ஜெயலலிதா மரணம் குறித்து 8 பேர் பிரமாண பத்திரம் தாக்கல்!

எனவே டிடிவி தினகரன் சார்பில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் முன்பு ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் விசாரணை கமிஷன் முன்பு சசிகலா ஆஜராவாரா? அல்லது அவரது வழக்கறிஞர் ஆஜராவாரா? என்று எதிர்பார்க்கபடுகிறது.

Trending News