ஜல்லிக்கட்டு போராட்டம்: அரசுக்கு 6 மணி வரை கெடு

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர அலங்காநல்லூர் மக்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மாலை 6 மணி வரை கெடு விதித்துள்ளனர்.

Last Updated : Jan 18, 2017, 04:31 PM IST
ஜல்லிக்கட்டு போராட்டம்: அரசுக்கு 6 மணி வரை கெடு title=

மதுரை: ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர அலங்காநல்லூர் மக்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மாலை 6 மணி வரை கெடு விதித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு, உச்சநீதிமன்றம் தடை காரணமாக கடந்த 2 ஆண்டாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு அனுமதி கிடைக்காவிட்டால், தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அறிவித்தனர்.

இவர்களுக்கு ஆதரவாக மாணவர்களும், இளைஞர்களும் களம் இறங்கினர். அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இது தவிர மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஜல்லிக் கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.அலங்காநல்லூரில் மாணவ்ர்கள் - இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தமிழகம் முழவதும் பரவியது.

தொடர்ந்து, சென்னை மெரீனாவிலும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த போராட்டம் விடிய விடிய 2வது நாளாக தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக, அலங்காநல்லூர் கிராம மக்கள் இன்று கூட்டம் போட்டு ஆலோசித்தனர். இந்த கூட்டத்தில், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு இன்று மாலை 6 மணி வரை கெடு விதித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். 

Trending News