பொங்கல் கொண்டாடும் நேரத்தில் தேர்தல் அறிவித்திருப்பது சரியானது அல்ல: தம்பிதுரை

பொங்கல் பண்டிகை காலத்தில் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என தம்பிதுரை கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 2, 2019, 04:00 PM IST
பொங்கல் கொண்டாடும் நேரத்தில் தேர்தல் அறிவித்திருப்பது சரியானது அல்ல: தம்பிதுரை title=

பொங்கல் பண்டிகை காலத்தில் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என தம்பிதுரை கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி காலியான திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் நாள் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்க்கான வேட்புமனு தாக்கல் சனவரி 3 ஆம் தேதி முதல் சனவரி 10 ஆம் தேதி வரை நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் சனவரி 14 ஆம் தேதி எனவும், திருவாரூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை சனவரி 31 ஆம் தேதி நடைபெறும் எனவும் தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இந்தநிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற மக்களவையில் துணை சபாநாயகர் தம்பிதுரை, திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவித்து இருப்பது வியப்பாக இருக்கிறது. இன்னும் கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த வாரம் முதல் பொங்கல் பண்டிகை காலம் தொடங்கி விடும். இந்தவேளையில் இடைத்தேர்தல் அறிவித்து இருப்பது சரியல்ல. இதுக்குறித்து தமிழகத் தேர்தல் ஆணையம் சிந்திக்க வேண்டும். முந்தைய திமுக ஆட்சியிலும் கூட பொங்கல் பண்டிகை காலத்தில் அறிவிக்கப்பட்ட பென்னாகரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது எனவும் கூறினார்.

Trending News