பேரறிவாளன் என்பவர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளியாகக் கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அதன் பின் 1991,-ம் ஆண்டு 11-ம் தேதி கைது செய்யப்பட்டவராவார். இவரது தூக்குத்தண்டனை 2011 செப்டம்பர் 9-ல் விதிக்கப்பட்டு அதன் பின் ரத்து செய்யப்பட்டது.
இவர் கடந்த 26 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். தற்போது இவருடைய வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இவரை விடுதலை செய்ய கோரி ஸ்டாலின் உட்பட பலர் வலியுத்தி வந்தனர்.
இது தொடர்பாக இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசியபோது;- , பேரறிவாளன் குற்றம் செய்யவில்லை எனில் அவரை விடுதலை செய்யலாம் என்றார். 26 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய காங்கிரஸ், பாஜக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் பேரறிவாளன் வாங்கிக் கொடுத்த பேட்டரியால்தான் பெல்ட் பாம் செய்யப்பட்டதா? என்கிற சர்ச்சை நீடிக்கிறது இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் ராமேஸ்வரம் மீனவர்களை கடலோர காவல்படை சுடவில்லை என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது எற்புடையது அல்ல என்றும் இளங்கோவன் கூறினார்.