சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், 23 வகை சான்றிதழ்களை இணையதளம் வழியாக வழங்கும் திட்டம், வரும் கல்வியாண்டிற்கான நாட்காட்டி திட்டம், ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்டம், காலாண்டு நாட்காட்டி திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டு, தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது,
‘ஜூன் 13ம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை திட்டமிட்டபடி பள்ளிகள் தொடங்கப்படும். ஜூன் 20ம் தேதி 12ம் வகுப்பிற்கும், ஜுன் 27ஆம் தேதியன்று 11ஆம் வகுப்பிற்கும் வகுப்புகள் துவக்கப்படும்.
மேலும் அடுத்த கல்வியாண்டுக்கான தேர்வுகள் எப்போது தொடங்குகிறது என்ற தேதிகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் அதில் சென்று பார்த்துக்கொள்ளலாம். மேலும் வருகின்ற கல்வியாண்டில் சனிக்கிழமைகளிலும் வகுப்புகளை நடத்த வேண்டிய தேவை உள்ளது. அதற்கு ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
அதேபோல், மாணவர்களுக்கு உரிய மனநல ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணித பாடத்தில் பாடத்திட்டத்தை தாண்டிய கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதால், அந்தப் பாடத்துக்கு மட்டும் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும். அதுமட்டுமல்லாமல், ஜூன் 13ம் தேதி காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமலுக்கு வராது. எப்போது திட்டத்தைத் தொடங்கலாம் என்பதை முதலமைச்சரிடம் பேசி முடிவு எடுக்கப்படும். இத்திட்டம் அமலுக்கு வந்தபின், பள்ளிகளில் காலை 8.30 மணிக்கு சிற்றுண்டி வழங்கப்படும்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை, பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட இலவச திட்டங்கள் பள்ளி துவங்கிய ஒரு மாத காலத்திற்குள் வழங்கப்படும். மேலும், தேர்வு எழுத வருகை தராத மாணவர்களுக்கு உத்வேகம் அளித்து அவர்களை மீண்டும் தேர்வு எழுத வரவைக்கக் கூடிய செயல்களை பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது. வெயில் காரணமாக சிபிஎஸ்இ பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கைகள் விடுத்ததால், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் ஜீன் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதனால் அதில் பெரிய மாற்றம் இல்லை’ என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | கர்நாடகாவில் பொதுத்தேர்வை புறக்கணித்த 20,000 பேர்! அமைச்சர் மறுப்பு
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR