கேளிக்கை வரிக்கு எதிர்த்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 1000 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், அபிராமி ராமநாதன் தலைமையிலான திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று நிதி அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்தனர்.
இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்:-
’திரையரங்கங்களுக்கான கேளிக்கை வரியை குறைப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்.
ஜிஎஸ்டி வரி எனக் கூறி கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பது தான் எங்களின் தலையாய கடமை என நடராஜன் கூறியது வரவேற்கத்தக்கது’
இவ்வாறு கூறினார்.