தேர்தல் அன்று தனியார் பள்ளிகள் இயங்கினால் கடும் நடவடிக்கை!!

ஏப்ரல் 18 தேர்தல் அன்று தனியார் பள்ளிகள் இயங்கினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Last Updated : Apr 2, 2019, 07:56 AM IST
தேர்தல் அன்று தனியார் பள்ளிகள் இயங்கினால் கடும் நடவடிக்கை!! title=

ஏப்ரல் 18 தேர்தல் அன்று தனியார் பள்ளிகள் இயங்கினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த வகையில் ஏப்ரல் 18-ம் தேதிஅன்று அரசு நிறுவனங்கள், பொதுத்துறைநிறுவனங்கள், அரசு பள்ளிகள்,தனியார் பள்ளிகள், கல்லூரிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பொதுவிடுமுறை நாளாக அறிவித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அதன்படி, தேர்தல் நாளான ஏப்ரல் 18 அன்று தனியார் பள்ளிகள் இயங்கினால், அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அன்றைய தினம் பொது விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Trending News