தென் கிழக்கு கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

Last Updated : Nov 10, 2018, 01:16 PM IST
தென் கிழக்கு கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை! title=

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.....

வடக்கு அந்தமான்  கடற்கரை பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறி, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாறும். மேலும், குமரி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் மற்றொரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவுவதால், நவம்பர் 13 ஆம் தேதி வரை அந்தமான் மற்றும் மத்திய தென் கிழக்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Trending News