சென்னை: கேரளாவை ஒட்டி உள்ள கன்னியாகுமரி நெல்லை, தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நல்ல மழை பெய்து வருகிறது. தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதன்மூலம் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கேரளாவை ஒட்டி உள்ள கன்னியாகுமரி நெல்லை, தேனி, கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சராசரியாக 5 செ.மீ. மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக தென் மாவட்டங்களில் மழை இருக்கும் எனவும்,அதேவேலையில் வட மாவட்டங்களில் அனல் காற்று வீசும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது
சென்னை உள்பட வட மாவட்டங்களில் 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே காலை 11மணி முதல் மாலை 4 மணி வரை இடைப்பட்ட நேரத்தில் மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.