தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களிலும் தென் தமிழகத்தின் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
வடகிழக்கு பருவமழை கடந்த 1 ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கி பரவலாக பெய்தது வருகிறது. இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் கன்னியாகுமரியை கடந்து செல்லும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழை ஒரு சில இடங்களில் பெய்யக்கூடும். உள் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களிலும் தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில் மழை இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேசுவரம், ராமநாதபுரம், பாம்பன், இரணியல், திருச்செந்தூர், தூத்துக்குடி, குளச்சல், ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
இதேபோல் அந்தமான் கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் (9 ஆம் தேதி) புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.