உலகத் தரம் வாய்ந்ததாக மெரினா கடற்கரையை மாற்ற அரசுக்கு HC உத்தரவு!

மெரினா கடற்கரையை 6 மாத காலத்திற்குள், உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!!

Last Updated : Dec 6, 2019, 12:20 PM IST
உலகத் தரம் வாய்ந்ததாக மெரினா கடற்கரையை மாற்ற அரசுக்கு HC உத்தரவு! title=

மெரினா கடற்கரையை 6 மாத காலத்திற்குள், உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!!

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினா கடற்கரையில் தற்போது வரை ஆயிரத்து 486 கடைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பதாகவும், லூப் சாலையில் இரண்டு ஏக்கரில் மீன் சந்தை கட்ட இருப்பதாகவும், பின்னர் அங்குள்ள மீன் கடைகளை ஒழங்குபடுத்தி மீன் சந்தைக்கு மாற்றப்படும் என அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் தெரிவித்தார்.

இதனையடுத்து, மெரினா கடற்கரை வணிக தளம் அல்ல என தெரிவித்த நீதிபதிகள், மெரினா கடற்கரை மக்களுக்கானது என தெரிவித்தனர். மேலும், அடுத்த 6 மாத காலத்திற்குள் மெரினா கடற்கரையை உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர். மெரினாவில் அமைந்துள்ள கடைகள் கடற்கரையின் ரம்மியமான தோற்றத்தை மறைக்கும் விதமாக அமைந்துள்ளதால், அவற்றை ஒழுங்குப்படுத்தி கடற்கரை நோக்கி திருப்பி வைக்குமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத கடைகளை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

மேலும், மெரினா கடற்கரையை 6 மாத காலத்திற்குள் உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்றவும், மெரினாவை தூய்மையாக வைப்பத்திருப்பது குறித்தும், வரும் 13 ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும், சென்னை மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

 

Trending News