ஜெயலலிதா போன்று 7 மொழிகளில் பேசுபவர் H.ராஜா: விஜயபாஸ்கர்

ஜெயலலிதா போன்று 7 மொழிகளில் பேசுபவர் H.ராஜா என ஹெச்.ராஜாவை ஆதரித்து சிவகங்கையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பு!!

Last Updated : Mar 24, 2019, 02:59 PM IST
ஜெயலலிதா போன்று 7 மொழிகளில் பேசுபவர் H.ராஜா: விஜயபாஸ்கர் title=

ஜெயலலிதா போன்று 7 மொழிகளில் பேசுபவர் H.ராஜா என ஹெச்.ராஜாவை ஆதரித்து சிவகங்கையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பு!!

சிவகங்கை: தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை போன்று 7 மொழிகளில் பேசுபவர் ஹெச்.ராஜா என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பாஜக தேசியச் செயலாளரும், சிவகங்கை தொகுதி வேட்பாளருமான ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசிய போது; சிவகங்கை தொகுதியில் ப. சிதம்பரம் எப்பொழுதும் அவுட் ஆஃப் கவரேஜ் ஏரியாவில் தான் இருப்பார் என்றார்.ஹெச். ராஜா-வை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் எனவும் தெரிவித்தார். 

இதற்கிடையே, ஹெச்.ராஜாவை எதிர்கொள்ள ஆளில்லாமல் தவிக்கிறதா காங்கிரஸ்? என விமர்சனமாக எழுந்த கேள்விக்கு, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கே பதவி என ராகுல் காந்தி முடிவு எடுத்துள்ளதால் தான் சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி விளக்கம் அளித்துள்ளார் மேலும், அவர்களது வெற்றி சூறையாடப்படும் என்றும் கே.எஸ். அழகிரி குறிப்பிட்டார்.

 

Trending News