கள்ளழகர் புறப்பாட்டை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவி - தமிழக அரசு ஏற்பாடு

மதுரை சித்திரைவிழாவில் கள்ளழகர் புறப்பாட்டின் போது இருப்பிடத்தை கண்டறிய GPS மூலம் தெரிந்துகொள்ள தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - S.Karthikeyan | Last Updated : Apr 2, 2022, 03:40 PM IST
  • மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகள் கோலாகலம்
  • கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு
  • ஜிபிஎஸ் கருவி மூலம் அறிந்து கொள்ள அரசு ஏற்பாடு
கள்ளழகர் புறப்பாட்டை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவி - தமிழக அரசு ஏற்பாடு title=

மதுரை அழகர்கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பிரசிதிபெற்ற கள்ளழகர் கோவில் சித்திரை பெருவிழா ஏப்ரல் 14-ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில் முக்கிய நிகழ்வாக மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிப்பதற்காக வருகை தரும் கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஏப்ரல்-16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் கோவில் துணை ஆணையர் அனிதா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

மேலும் படிக்க | நீட் பயிற்சி மைய விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை - காதல் விவகாரமா ?

அப்போது பேசிய அவர், "திருவிழா 14 ம் தேதி தொடங்கி 21ம் தேதி திருமஞ்சனத்தோடு திருவிழா நிறைவு பெறுகிறது. 2  ஆண்டுகளுக்கு பிறகு விழா நடைபெறுவதால் மக்கள் ஆர்வத்தோடு உள்ளனர். வரும் 14 ஆம் தேதி மாலை புறப்பாடாகி ஒவ்வொரு மண்டகப்படியில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளார். கள்ளழகர் புறப்பாட்டின்போது 456 மண்டகப்படிகள் உள்ளன. 7-8 மண்டகப்படிகள் புதிதாக கேட்கப்பட்டுள்ளன அது பரீசீலனை செய்யப்படும். 

கள்ளழகர் புறப்பாடு எதிர்சேவையின்போது GPS முறையில் புதிய லிங்க் ஒன்று தொடங்கப்பட்டு அழகர் எங்கு உள்ளார், எந்த மண்டகப்படியில் உள்ளார் என்பதை தெரிந்துகொள்ளலாம். இதேபோன்று மதுரை காவலன் என்ற மொபைல் ஆப் வழியாகவும், கோவில் இணையதளம் மற்றும் தனி லிங்க் மூலமாகவும் கள்ளழகர் இருப்பிடம் அறிந்துகொள்ள ஏற்பாடு உள்ளது. கள்ளழகர் வருகை தரும் மண்டகப்படிகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு மண்டகப்படி பின்புறம் சேதமடைந்துள்ளதால் அங்கு மக்கள் கூடுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கள்ளழகர் புறப்பாடு மற்றும் எதிர்சேவையின்போது பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தும் வகையில் சாமிக்கு தண்ணீர் பீய்ச்சுவதை பாரம்பரிய முறைப்படி செய்ய வேண்டும். நவீன இயந்திரங்களை பயன்படுத்துவதால் அழுத்தம் அதிகமாகி சாமி சிலை சேதாரம் அடைவதால் பக்தர்கள் அதனை தவிர்க்க வேண்டும். மேலும் நவீன இயந்திரங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்து காவல்துறை மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்" எனக் கூறினார். 

மேலும் படிக்க | பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு ?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News