கிசுகிசு : சூரிய கட்சியை சீண்டும் கதர் கட்சி தலைகள்...! உள்ளாட்சிக்கு கை கழுவ ரெடியாகும் தலைமை

Gossip, கிசுகிசு : மாநில கதர் கட்சி தலைகள் அடுத்தடுத்து சீண்டும் வகையில் பேசிக் கொண்டிருப்பதை சூரியக்கட்சி தலைமை கொஞ்சம் கூட ரசிக்கவில்லையாம். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 21, 2024, 03:05 PM IST
  • சூரிய கட்சியை சீண்டும் கதர் தலைகள்
  • உள்ளாட்சிக்கு முன் கை கழுவ திட்டம்
  • கதர் தலைமை மீது சீனியர்கள் கடும் கோபம்
கிசுகிசு : சூரிய கட்சியை சீண்டும் கதர் கட்சி தலைகள்...! உள்ளாட்சிக்கு கை கழுவ ரெடியாகும் தலைமை title=

Gossip Tamil News : கதர் வேட்டி சட்டையோடு வந்த குசும்பனை பார்த்து அசந்துபோன டீக்கடை மாஸ்டர், ‘ என்னப்பா, கதரோட பிரகாசமா இருக்கியே, என்ன சேதி?’ என கேட்க, ‘ அண்ணே கதர் கட்சியோட தலைமை பக்கம் போய்ட்டு, சூரிய கட்சி ஆபீஸ் பக்கமும் போய்ட்டு வந்தேன். அதனால் தான் இந்த கெட்டப்.’ என சொன்னான் குசும்பன். ’அப்படியா, ஆனால் கதர் பிரகாசம் கொஞ்சம் கம்மியா இருக்கே, என்ன மேட்டரு?’ என பொடி வச்சு மாஸ்டர் பேசினார். ‘ அண்ணே! நீங்க என்கிட்ட பொடி வச்செல்லாம் பேசமா, நேராவே கேட்கலாம், இருந்தாலும் நானே சொல்றேன். கதர் கட்சி தலைகள் எல்லாம் கொஞ்ச நாளால பேசுறது சூரியக்கட்சியோட தலைமைய சீண்டுற மாதிரி இருக்கு. அதனால் இரண்டு கட்சிக்கும் மெல்ல மெல்ல கசப்புகள் உருவாக தொடங்கியிருக்கு. இல்ல.. இல்ல, உள்ளுக்குள்ள இருந்தது வெளியில வர்ற ஆரம்பிச்சிருக்கு.

மேலும் படிக்க | 2026 தேர்தலுக்கு முன்பு அதிமுக ஒன்றாக இணையும் - ஓபிஎஸ் அதிரடி!

ஏன்னா, கதர் கட்சி தலைமை முதல் தொண்டர்கள் வரை எல்லோரையுமே சூரியகட்சி ஒரே மாதிரி தான் ட்ரீட் பண்ணுதாம். சில கதர் தலைகள் தங்களுக்கு இருக்கிற செல்வாக்கில் சூரிய கட்சியோட இணக்கமாக இருக்கிற நிலையில், மத்த எல்லோருக்கும் எதிர்பார்க்குற மரியாதை கொடுக்கிறது இல்லை, அப்படினு பொருமுறாங்களாம். இதுல மாநில தலைமையான செல்வமானவரும், ஜூனியர் ‘சி’  ஆனவரும் அடக்கம். அதனால தான், கட்சி மீட்டிங்குல, நம்மளுக்கு மரியாதை இல்லை, அந்த மரியாதை தானா வர்ற அளவுக்கு நம்மல நாம உயர்த்திக்கணும், நாம ஆண்ட கட்சி, அந்த பலத்தை நம்மால பெற முடியும். கூட்டணிக்கு நாம எதிர்பார்க்காம, நம்மல எதிர்பார்க்குற இடத்துக்கு வர்றனும் என செல்வமானவர் பேசிக்கிட்டு இருக்காரு. அவரோட பேச்சை அக்கட்சியோட சீனியர்களே விரும்பவில்லை என்றாலும், ஜூனியர் சி வெளிப்படையா ஆதரவு தெரிவிச்சிட்டாரு. ’ஆமாம், அவரு சொல்றது சரிதான். அமைச்சரவையிலேயே இடம் பெறணும்’ னு சொல்லிட்டாரு அவரு.

மேலும் படிக்க | 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் திமுக: ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு

பேசுறதுக்கு நல்லா தான் இருக்கு, ஆனால் எங்க கட்சியை வளர்க்குறீங்க, சூரியகட்சி இல்லன்னா, இப்போ இருக்கிற இடத்துல கூட கதரு இருக்காது, கொஞ்சம் பார்த்து சூதானமா நடந்துக்கோங்கனு என சீனியர் கதர் இவங்க ரெண்டு பேருக்கும் எச்சரிக்கை கொடுத்திட்டாரு. இங்க கவனிக்க வேண்டிய விஷயம் என்னனா, கட்சி வளர்க்கிறது பத்தி பேசனா பரவாயில்லை, ஆனால் இவங்க பேச்சுல கூட்டணியை கட்சியை, அதுவும் சூரிய கட்சியை தாக்கியே பேசுறது வெளிப்படையா தெரியது. அதுதான் சூரிய கட்சிய கோவப்பட வச்சிருக்கு. சூரியகட்சி தலைமையும் இதையெல்லாம் கவனிச்சிட்டு இருக்கிறதால, உள்ளாட்சி தேர்தலின்போதே கழற்றிவிட பிளான் பண்ணிட்டு இருக்காம். அந்த கட்சியோட சீனியர் தலைகள் எல்லோரும் நாம ஏன் கதர தூக்கி பொதி சுமக்கணும், தனியாவே ஒரு கை பார்க்கலாம்னு போன உள்ளாட்சி தேர்தல் அப்போவே தலைமைகிட்ட சொல்லிட்டாங்க. 

பல இடங்களில், சூரியகட்சிக்கும் கதர் கட்சிக்கும் வெளிப்படையாகவே மோதல் வெடிச்சு, அப்புறம் சூரிய கட்சி தலைமை தலையிட்டு தீர்த்து வச்சுச்சு. அதனால் இந்த முறை உள்ளாட்சியில தனியாவே பார்த்துக்கலாம் என்கிற முடிவுல சூரிய கட்சி இருந்த நேரத்தில தான், கதர் கட்சி தலைகள் எல்லாம், நம்ம பலத்த காட்டணும்னு பேசிட்டு இருக்காங்க. இதையே வாய்ப்பா வச்சி அவங்கள கழற்றிவிடலாம்ங்கிற முடிவுக்கு சூரிய கட்சி வந்துருச்சு. அதற்கான வாய்ப்பை கதர் கட்சி தலைகளே உருவாக்கிட்டு வர்றது சூரிய கட்சி தலைகளுக்கு டபுள் ஹேப்பியாம். குறிப்பா சூரிய கட்சி சீனியர்கள், இதைபத்தி தலைமைக்கிட்ட சொல்லி, எப்படியும் ஓகே வாங்கிறலாம்ங்கிற முடிவுல இருக்காங்க. அதனால், உள்ளாட்சியில கதர் தனியா களமிறங்க வாய்ப்பு அதிகம்’ என இன்றைய கதையை முடிச்சிட்டு கிளம்பினான் குசும்பன். 

மேலும் படிக்க | கிசுகிசு : மாஜிக்கள் மனம்மாற தொடங்கியிருப்பதால் கோபத்தில் இருக்கும் சேலத்துக்காரர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News