Tamil Nadu Schools Leave Updates: ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட்டை தமிழக பள்ளிக் கல்வித்துறை தந்துள்ளது. அதாவது பள்ளி வேலை நாட்கள் குறைத்து புதிய அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த புதிய அட்டவணையில், முக்கியமாக அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை என அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கக்து.
தற்போது தமிழ்நாட்டில் 2024-25 கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலைநாட்கள் 210 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் கடந்த மாதத்தில் (செப்டம்பர்) நடைபெற்ற காலாண்டு தேர்விற்கான விடுமுறை நாட்கள் அதிகரிக்கப்பட்டதால், நடப்பு ஆண்டுக்கான தமிழக பள்ளி வேலைநாட்கள் திருத்தம் செய்யப்பட்டு புதிய பள்ளி வேலை நாட்கள் அட்டவணை வெளியிடப்பட்டது.
அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை
2024 டிசம்பர் 12 மற்றும் 2025 மார்ச் 22 சனிக்கிழமை தவிர மற்ற அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதனுடன் வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
அக்டோபர் மாதம் பள்ளி விடுமுறை நாட்கள்
காலாண்டு தேர்வு விடுமுறை அடுத்து, கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் மீண்டும் தொடங்கப்பட்டது. அக்டோபர் 11 (சரஸ்வதி பூஜை)
அக்டோபர் 12 (விஜயதசமி)
அக்டோபர் 31 (தீபாவளி)
அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுகிழமை
அக்டோபர் மாதம் பள்ளி விடுமுறை நாட்கள்
நவம்பர் மாதத்தில் அரசு விடுமுறை நாட்கள் கிடையாது. அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுகிழமை தவிர, மற்ற நாட்களில் பள்ளிகள் செயல்படும். மொத்தமுள்ள 30 நாட்களில், 21 பள்ளி வேலை நாட்களாக இருக்கும். சனி, ஞாயிற்றுகிழமை என 9 நாட்கள் விடுமுறை நாட்களாக இருக்கும்.
டிசம்பர் மாதம் பள்ளி விடுமுறை நாட்கள்
இந்த மாதம் மானவர்களுக்கு முக்கியமான மாதமாகும். ஏனென்றால் டிசம்பர் மாதத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. டிசம்பர் 16 ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு தொடங்குவதால், டிசம்பர் 15 ஆம் தேதி வரை, வார விடுமுறை நாட்கள் (சனி மற்றும் ஞாயிற்றுகிழமை) தவிர மற்ற நாட்கள் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்.
அரையாண்டு தேர்வு எப்பொழுது?
டிசம்பர் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும். அதன்பிறகு டிசம்பர் 24 ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படும். 2025 ஜனவரி 2 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். 2024 டிசம்பர் 24 முதல் 2025 ஜனவரி 1 வரை அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படும்.
ஜனவரி மாதம் பள்ளி விடுமுறை நாட்கள்
2025 ஜனவரி மாதத்தில் புத்தாண்டு ஜனவரி 1), பொங்கல் பண்டிகை (ஜனவரி14, 15, 16) குடியரசு தினம் (ஜனவரி 26) மற்றும் வார விடுமுறை நாட்கள் (சனி மற்றும் ஞாயிற்றுகிழமை) என போக மொத்தம் 19 நாட்கள் பள்ளிகள் செயல்படும். இதே மாதத்தில் தான் 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு நடைபெறும்.
திருப்புதல் தேர்வு விவரம்
ஜனவரி 6 - முதல் திருப்புதல் தேர்வு (10, 12ம் வகுப்பு)
ஜனவரி 29 - இரண்டாம் திருத்தல் தேர்வு
பிப்ரவரி மாதம் பள்ளி விடுமுறை நாட்கள்
2025 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 28 நாட்கள் உள்ளன. அதில் தைப்பூசம் (பிப்ரவரி 11) மற்றும் வார விடுமுறை நாட்கள் (சனி மற்றும் ஞாயிற்றுகிழமை) போக மொத்தம் 19 நாட்கள் பள்ளிகள் செயல்படும்.
மார்ச் மாதம் பள்ளி விடுமுறை நாட்கள்
2025 மார்ச் மாதத்தில் மூன்றாம் திருப்புதல் தேர்வு (மார்ச் 3) 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும். இந்த மாதத்தில் 31 நாட்கள் உள்ளன. அதில் தெலுங்கு வருடப்பிறப்பு (மார்ச் 30) மற்றும் ரமலான் பண்டிகை (மார்ச் 31) மற்றும் வார விடுமுறை நாட்கள் (சனி மற்றும் ஞாயிற்றுகிழமை) போக மொத்தம் 21 நாட்கள் பள்ளிகள் செயல்படும்.
ஏப்ரல் மாதம் பள்ளி விடுமுறை நாட்கள்
மாணவ -மாணவிகளுக்கு ஏப்ரல் மாதம் முக்கியமான மாதமாகும். இந்த மாதத்தில் தான் முழு ஆண்டு தேர்வு தொடங்குகிறது. ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை முழு ஆண்டு தேர்வுகள் நடைபெறும். ஏப்ரல் மாதத்தில் மகாவீர் ஜெயந்தி (ஏப்ரல் 10), அம்பேத்கர் பிறந்த நாள் (ஏப்ரல் 14), புனித வெள்ளி (ஏப்ரல் 18) மற்றும் வார விடுமுறை நாட்கள் (சனி மற்றும் ஞாயிற்றுகிழமை) போக மொத்தம் 19 நாட்கள் பள்ளிகள் செயல்படும்.
மேலும் படிக்க - தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு, யாருக்கு எவ்வளவு?
மேலும் படிக்க - பென்ஷன் தேதியில் மாற்றம்.. வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் போட்ட அதிரடி உத்தரவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ