‘விநாயகர் சதுர்த்தி: நாடு முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு’

ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது!!

Last Updated : Sep 2, 2019, 08:51 AM IST
‘விநாயகர் சதுர்த்தி: நாடு முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு’ title=

ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது!!

முழு முதற் கடவுள், வினை தீர்ப்பவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த திருநாளாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகர் அவதரித்த தினத்தை தான் நாம் விநாயகர் சதுர்த்தி தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறோம். இந்நிலையில், மஹாராஷ்டரா மாநிலம் அவுரங்க பாத்தில் விநாயகர் சதுர்த்தி விழா களை கட்டியுள்ளது. பொதுவாக பிள்ளையார் சிலைகளை மண்ணிலும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற கலவைகளிலும் உருவாக்குவார்கள். ஆனால் kharadi என்ற மகராஷ்ட்டிர கிராமத்தில் சுற்றுச்சூழலை பேணும் வகையில் குளத்தின் மண்ணால் பச்சை வயல் வெளியில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அதிகாலையில் நீராடி, வீடுகள்தோறும் மாவிலைத் தோரணம் கட்டி, இலையில் புத்தரிசியைப் பரப்பி களிமண்ணால் ஆன விநாயகரை வைத்து, அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ உள்ளிட்ட பூக்களால் அலங்கரிக்கின்றனர். முக்கனிகளுடன், அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கொய்யாப்பழம் போன்றவற்றைப் படையலிட்டு விநாயகரை வழிபடுகின்றனர். 

விநாயகர் சதுர்த்தி நாளில், உணவு எதுவும் எடுக்காமல் விரதம் இருந்து வழிபடுவோரும் உண்டு. விநாயகர் கோவில்கள் அலங்கரிக்கப்பட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. பலதரப்பட்ட மக்களும், கலாச்சாரமும் கொண்ட இந்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுவது என்பதுதான் விநாயகர் சதுர்த்தியின் தனிச்சிறப்பு. 

'அனைவருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...' என விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

ஆசியாவிலேயே 2வது பெரிய விநாயகர் சிலை என்ற பெருமைக்குரிய கோவை புளியகுளம் சித்தி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருச்சி உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகர், புதுச்சேரி மணக்குள விநாயகர், பரமத்தி வேலூர் பஞ்சமுக விநாயகர், கோவை புலியகுளம் முந்திவிநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. ஆங்காங்கே அமைக்கப்பட்ட விநாயகர் பந்தல்களிலும் பிள்ளையார் கோவில்களிலும் மக்கள் முழுமுதற் கடவுளை வழிபடுகின்றனர்.

மும்பையில் பிரபலமான லால்பவுச்சர் ராஜா விநாயகர் சிலை அமைக்கப்பட்டு பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். 

 

Trending News