முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றொரு வழக்கிலும் கைது

தேர்தலன்று ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட  வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 23, 2022, 10:50 AM IST
  • ஜெயக்குமார் மீண்டும் கைது
  • மார்ச் 7 ம் தேதி வரை நீதிமன்ற காவல்
  • ஜெயக்குமார் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றொரு வழக்கிலும் கைது title=

கடந்த 19ம் தேதி சென்னையில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவின்போது திமுக தொண்டர் ஒருவர் கள்ள ஓட்டுப் போட முயன்றதாக அதிமுகவினர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை சட்டையைக் கழற்றி ரோட்டில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் இப்படி பட்டப் பகலில் ஒருவரை சட்டையைக் கழற்றி அழைத்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலானது. இதையடுத்து நரேஷ் என்பவர் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் ஜெயக்குமார் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்தப் புகாரின் பேரில் ஜெயக்குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஜெயக்குமார் கைது விவகாரத்தை அதிமுக கூட்டணிக் கட்சிகள் கடுமையாக கண்டித்தனர். மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 21ம் தேதி இரவு கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் பூந்தமல்லி சிறையில் உள்ளார்.

மேலும் படிக்க | பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

இந்த நிலையில் தற்போது மார்ச் 7 ம் தேதி வரை நீதிமன்ற காவல் இருக்கும் நிலையில் ஜெயகுமார் சார்பில் இன்று ஜாமின் மனு தாக்கல் செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர் கூறியிருந்த நிலையில் மற்றொரு வழக்கிலும் ஜெயகுமார் கைது செய்யாப்பட்டுள்ளார். வாக்குப்பதிவு நாளன்று திமுகவினர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ராயபுரம் பகுதியில் அதிமுக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் மறியலில் ஈடுபட்டார்.

சென்னையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தடையை மீறியும், அரசு உத்தரவை மீறியும் போராட்டத்தில் ஈடுபட்டதாக தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நோய் பரவ காரணமாக செயல்படுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகள் என நான்கு பிரிவுகளின் கீழ் ராயபுரம் போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 95 ஆண்கள் 18 பெண்கள் என மொத்தம் 113 பேர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கில் பூந்தமல்லி சிறையில் உள்ள அவரை இந்த வழக்கிலும் கைது செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்தலன்று ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஹிஜாப் சர்ச்சை: 3 நாட்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகளை மூட கர்நாடக முதல்வர் உத்தரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News