எந்த மாநிலத்திற்கும் தனியாக என்று நிலுவைத் தொகை வைக்கவில்லை; விரைவில் நிலுவைத் தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!!
சென்னை: எந்த மாநிலத்திற்கும் தனியாக என்று நிலுவைத் தொகை வைக்கவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதி குறைக்கப்படவில்லை. விரைவில் நிலுவைத் தொகை வழங்கப்படும். சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலை தொடர்பான திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சென்னையில் நடைபெற்ற மக்களுக்கான பட்ஜெட் கூட்டத்தில் உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்... இந்திய பொருளாதாரம் வலுவாகவும், துடிப்புடனும் உள்ளது. அடிப்படை கட்டமைப்புகள் வலுவாக உள்ளது. வெளிநாட்டு அன்னிய முதலீடு அதிகளவில் உள்ளது.சிறுகுறு தொழில் செய்பவர்களுடன் நிதித்துறை அமைச்சக அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.
சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு எந்தவித காரணமும் இல்லாமல், வங்கிகள் கடன் அளிக்க மறுத்தால், சிறப்பு மையத்திற்கு இமெயில் மூலம் புகார் அளிக்கலாம். இந்த சிறப்பு மையம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். புகாரின் நகலை வங்கி மேலாளருக்கும் அனுப்பி வைக்கலாம். விரைவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தை மீண்டும் எட்டும்" என அவர் கூறினார்.
Nirmala Sitharaman interacts with traders in Chennai, says economy is 'robust'
Read @ANI story | https://t.co/mdCEitk8uG pic.twitter.com/ntALr3Y5IN
— ANI Digital (@ani_digital) February 8, 2020
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்... மாநிலங்களுக்கான நிதி குறைக்கப்படவில்லை. விரைவில் நிலுவைத்தொகை வழங்கப்படும். மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரிப்பது போல் மத்திய பட்ஜெட் உள்ளதாக கூறுவது தவறு. மத்திய பட்ஜெட் தொடர்பாக, பார்லிமென்ட் தொடர் நடக்கும்போதே, நிபுணர்களுடன் ஆலோசித்தோம்.
இந்திய தொழில் வர்த்தக நிபுணர்களின் கருத்துகளை கேட்டறிந்தோம். இது புதிய முயற்சி. இதற்கு வரவேற்பு உள்ளது.விவசாயிகளுக்கான நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளது. சோலார் பம்ப் திட்டத்திற்கு எவ்வளவு நிதி வழங்கப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும். எல்.ஐ.சி.,யில் எத்தனை சதவீத பங்குகளை விற்பது என முடிவு செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.