கடல் மீன் சாப்பிட்டு எத்தன நாளாச்சு - வேட்டைக்கு தயாராகும் கடல் ராசாக்கள் !

61 நாட்களாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த மீன்பிடித் தடைக்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவடைவதை ஒட்டி மீனவர்கள் மீன்பிடிப்புக்கு தயாராகி வருகின்றனர்.   

Written by - Gowtham Natarajan | Last Updated : Jun 13, 2022, 04:35 PM IST
  • நாளை நிறைவடையும் மீன்பிடித் தடைக்காலம்
  • 1,750 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தயார்
  • மீன்பிடிப்பு பணிகள் - மீனவர்கள் தீவிரம்
கடல் மீன் சாப்பிட்டு எத்தன நாளாச்சு - வேட்டைக்கு தயாராகும் கடல் ராசாக்கள் ! title=

தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க செல்வதற்கு அரசு தடை விதிக்கும். இந்நிலையில் இந்தாண்டுக்கான தடைக்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இதனை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 1ஆயிரத்து750க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகின்றனர்.

Fishing,fisherman,Fishing ban,period,Rameswaram,ராமேசுவரம்,மீன்பிடித் தடைக்காலம் ,கடல் ராசாக்கள்,கடல் மீன்,தடைக்காலம்

இதனைத்தொடர்ந்து, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி, சோழியகுடி உள்ளிட்ட பகுதிகளில் 1,750 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தடை காலத்தின் போது படகுகளை சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

தற்போது, அந்தந்த துறைமுகங்களில் இருந்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகின்றனர்.

Fishing,fisherman,Fishing ban,period,Rameswaram,ராமேசுவரம்,மீன்பிடித் தடைக்காலம் ,கடல் ராசாக்கள்,கடல் மீன்,தடைக்காலம்

ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 700க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்ல உள்ள நிலையில், மீன்பிடிக்க செல்ல சீரமைப்பு பணிக்காக கரையில் ஏற்றப்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் இறக்கி வருகின்றனர். 

மீன்பிடிக்க செல்வதற்கு தேவையாக டீசல், வலைகள், உணவுப்பொருட்கள்,மற்றும் ஐஸ் கட்டிகள் வாங்கி படகுகளுக்கு கொண்டு செல்லும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | காதலித்ததால் கரு உண்டானது - பயத்தில் பூச்சி மருந்து குடித்த இளம் ஜோடி!

Fishing,fisherman,Fishing ban,period,Rameswaram,ராமேசுவரம்,மீன்பிடித் தடைக்காலம் ,கடல் ராசாக்கள்,கடல் மீன்,தடைக்காலம்

இந்நிலையில், இரண்டு மாதங்களாக வருமானமின்றி தவித்து வந்த மீனவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் களத்தில் இறங்கியுள்ளனர். கடல் மீன்கள் கிடைக்காமல் ருசிக்க முடியாமல் தவித்து வந்த பொதுமக்களும் இனி சந்தோஷத்தில் மிதப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | விபத்து குறித்து விசாரிக்க சென்ற 2 காவலர்கள் பலி - இருட்டில் என்ன நடந்தது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News