சென்னை போரூரில், குன்றத்தூர் பிரதான சாலையில் ராஜாராம் என்பவர் இ-பைக் ஷோரூம் நடத்தி வருகிறார். போரூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் இந்த ஷோரூமி்ல் இ-பைக்குகள் வாங்கியுள்ளனர். இந்நிலையில், பைக் வாங்கியவர்கள் சர்வீஸ் செய்வதற்காக பைக்குகளை கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த ஷோரூமில் சார்ஜ் போடப்பட்டிருந்த பைக்கின் பேட்டரி வெடித்து தீப்பிடித்துள்ளது. இதைப் பார்த்த ஊழியர்கள் அலறியடுத்துக் கொண்டு கடையை விட்டு வெளியே ஓடினர். ஆனால் அதற்குள் தீ மளமளவென பரவியது.
மேலும் படிக்க | ‘இதனால்தான் கொலை செய்தோம்!’ - நாயைக் கொடூரமாக கொன்ற 3 பேர் கைது
இதில் 5 புதிய இ-பைக்குகள், மற்றும் சர்வீஸ் செய்வதற்காக வந்த 12 பைக்குகள் என மொத்தம் 17 பைக்குகள் எரிந்து சேதமாயின. மேலும் ஷோரூமிலிருந்த பொருட்களும் தீப்பிடித்து எரிந்து சேதமாயின.
இது குறித்து தகவல் அறிந்த விருகம்பாக்கம் தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் சுமார் 8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.
இது குறித்து போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த தீ விபத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பேட்டரிகளால் இயங்கும் இ-பைக்குகள் சமீப காலமாக தீப்பிடித்து எரிந்து வரும் சம்பவங்கள் வாடிக்கையாளர்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மின்சார வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பெட்ரோல் டீசல் விலைகள் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், மின்சார வாகனங்கள் நல்ல மாற்றாக பார்க்கப்படுவதால், மக்கள் மத்தியில் அவை பிரபலமாகி வருகின்றன.
ஆனால், சமீப காலமாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதால், தற்போது மக்கள் மத்தியில் மின்சார ஸ்கூட்டர்கள் தொடர்பான அச்சமும் அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க | சென்னையில் 30 நிமிட பயணம் இனி 4 நிமிடத்தில்..! தமிழக அரசின் சூப்பர் பிளான்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR