செந்தில் பாலாஜி ஐம்பதாயிரம் கோடி ரூபாய் ஊழல்? கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

பெரிய அளவில் மின்சாரத் துறையில் ஊழல் செய்துவிட்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என கோவையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு.  

Written by - RK Spark | Last Updated : Jun 10, 2023, 02:12 PM IST
  • தற்போது 19 டாஸ்மாக் ஆலைகள் உள்ளது.
  • இதில் 15 ஆலைகள் திமுக குடும்பத்துடையது.
  • திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடையது.
செந்தில் பாலாஜி ஐம்பதாயிரம் கோடி ரூபாய் ஊழல்? கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! title=

கோவை குனியமுத்தூரில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சாராயத்திற்கும் கல்லுக்கும் மாற்றாக டாஸ்மாக் மட்டுமே மது விற்பனை செய்யும் என்று அறிவித்து 5360 சில்லரை டாஸ்மாக் விற்பனை மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. துவக்கத்தில் இந்த டாஸ்மாக்கிற்கு இரண்டு ஆலைகள் மட்டுமே இருந்தன. தமிழ்நாட்டில் எந்த ஆலைகள் மூடப்பட்டாலும் மது ஆலை மட்டும் அதிகரித்தது. தற்போது 19 டாஸ்மாக் ஆலைகள் உள்ளது.  இதில் 15 ஆலைகள் திமுக குடும்பத்துடையது. திமுக அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடையது. அவர்கள் நேரடியாக ஆலைகளை நடத்துகின்றனர்.  தமிழ்நாட்டு மக்களை குடிக்க வைக்க வேண்டும் என்று நோக்கத்தோடு திமுக அரசு செயல்படுகிறது.

கனிமொழி தமிழ்நாட்டில் இளம் விதவைகள் உருவாகின்றனர் என தெரிவித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அவர்கள் அறிவித்த மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு பதிலாக புதிது புதிதாக மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மது விற்பனை துவங்கப்படுகிறது. தாபா தென்னந்தோப்பு பனந்தோப்பு மூலமாகவும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்டி கடையில் கூட மது விற்பனை செய்யப்படும் அளவிற்கு மோசமாகி உள்ளது.  நம்பர் இல்லாமல் 200 கடைகள் கோவையில் சட்டவிதி மீறி உள்ளது. கடந்த 22 மாதமாக அரசாங்கத்திற்கு பணம் செலுத்தாமல் சட்டவிரோத பார்களில் இருந்து வரும் பணம் கரூர் பார்ட்டி என்ற பெயரில் அண்ணன் சொல்லியுள்ளார் என்ற பெயரில் செந்தில் பாலாஜி கஜானா நிரம்பி உள்ளது. அரசுக்கு செல்ல வேண்டிய ஐம்பதாயிரம் கோடி ரூபாய் போகவில்லை.  செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநரிடம் மனு கொடுத்து உள்ளோம். ஆர்ப்பாட்டம் பேரணி நடத்தினோம். ஆனால் முதல்வர் கண்டுகொள்ளவில்லை. செந்தில் பாலாஜியால் இந்த ஆட்சிக்கு ஆபத்து. முதல்வர் ஏன் தயங்குகிறார்.

மேலும் படிக்க | மின் கட்டணம் உயர்வு, ஆனால்... மின்சார வாரியம் விளக்கம்!

ஜீன்15 மாதம் முதல் ஆகஸ்ட் 15 வரை 100 பொது கூட்டங்கள் புதிய தமிழகம் சார்பில் நடத்த உள்ளோம்.  5362 சட்டவிரோத பார்களை நடத்தி வரும் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பூரண மதுவிலக்கை வலியுறுத்தியும் தொடர் பொதுக்கூட்டங்கள் விழிப்புணர்வாக நடத்தப்படும்.திமுக அரசு வாக்குறுதியில் மின் கட்டண உயர்வு இருக்காது என்று சொன்னார்கள்.  பல தொழில் முனைவோர்கள் ஏற்கனவே உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்த நிலையில், மீண்டும் மின்கட்டண உயர்வு அதிகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.  மின்சாரத் துறையில் ஊழலை தடுத்தாலே நட்டமில்லாமல் மின்வாரியத்தை நடத்த முடியும். தரமற்ற நிலக்கரியை வாங்குகின்றனர்.  அதனால் உற்பத்தி பாதிப்பு. பெரிய அளவில் மின்சாரத் துறையில் ஊழல் செய்துவிட்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும். மின் துறையில் இழப்பு ஏற்பட்டால் அரசு சரி செய்ய வேண்டும் மக்கள் தலையில் செலுத்தக் கூடாது.

செந்தில் பாலாஜி பல தில்லுமுல்லுகளில் ஈடுபடுகிறார். அவரை குற்றவாளி கூண்டில் நிறுத்துவோம். சட்ட விரோதமாக பெட்டிக்கடை வரை டாஸ்மாக்கை கொண்டு சேர்த்து விட்டனர்.  பெட்டி கடை வரை மது விற்பனை செய்யப்படுவதற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். மனமகிழ் மன்றங்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் கடைகளை மூடுகின்றனர். இதில் மதுவிலக்கு கொள்கை கிடையாது. தனியார் விற்பனை குறையக்கூடாது என்பதற்கு டாஸ்மாக்குகளை மூடுகின்றனர். இந்த திமுக அரசு தேவைப்பட்டால் மத்திய அரசை துணை  கொள்வார்கள், இல்லை என்றால் மத்திய அரசின் மீது பழி போடுவார்கள்.  ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கின்றனர். ஸ்டாலின் அரசு ஆணவப் போக்காக உள்ளது.  மோடியுடன் மோத முடியாது என்பதால் ஆளுநருடன் மோதுகின்றனர். தமிழ்நாடு இந்தியாவோடு இல்லை என தீர்மானத்தை போட்டுக் கொள்ளுங்கள் என்று பேசினார்.

மேலும் படிக்க | ஆளுநரின் அரசியல் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது - சொன்னவர் செல்லூர் ராஜூ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News