எட்டப்பன் ஆனாரா ஓ.பன்னீர்செல்வம்: ஒப்பிட்ட முன்னாள் அமைச்சர்

அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கேட்டு நீதி மன்றத்தை ஓபிஎஸ் நாடி இருந்த நிலையில், பொதுக்குழுவிற்கு தடை இல்லை என்று நீதி மன்றம் கூறியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 11, 2022, 11:05 AM IST
  • அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்று வருகிறது.
  • இடைக்கால பொதுசெயலாளரானர் எடப்பாடி பழனிச்சாமி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்.
  • பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்.
எட்டப்பன் ஆனாரா ஓ.பன்னீர்செல்வம்: ஒப்பிட்ட முன்னாள் அமைச்சர் title=

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.  கட்சிக்குள் நடைபெற்று வந்த சண்டை பொதுவெளியில் வந்துவிட்டது.  எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ பன்னீர்செல்வத்திற்கும் இடையே நடந்து வந்த பனிபோர் பெரிதாக வெடித்துள்ளது.  கடந்த மாதம் ஜூன் 23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன.  பொதுக்குழு நடைபெற்று கொண்டிருக்கும் போதே பாதியில் பன்னீர்செல்வம் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.  பிறகு பொதுக்குழு ஜுலை 11ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் படிக்க | பொது குழுவிற்கு தடை இல்லை: நீதி மன்றம் அளித்த தீர்ப்பின் முழு விவரம்

 

இந்நிலையில் இந்த பொதுக்குழுவில் எடப்பாடியை பொதுச்செயலாளராக நியமிக்க இருப்பதாக தகவல் வெளியானது.  இதனால் இந்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டி ஓ பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடி இருந்தார்.  இந்த வழக்கிற்கான தீர்ப்பு இன்று காலை 9 மணிக்கு வெளியாகும் என்று நீதிபதி தெரிவித்து இருந்தார்.  இன்று வெளியான தீர்ப்பில் பொதுக்குழுவிற்கு தடை இல்லை என்றும், கட்சி உள்விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.  இதனால் ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சிக்கு உள்ளாகியது.  பொதுக்குழு நடைபெற்று கொண்டிருந்த அதே சமயத்தில் அதிமுக அலுவலகத்தில் இருதரப்பினருக்கும் இடையே போர்க்களம் வெடித்தது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது, அதிமுக பொது செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு, இலங்கை தமிழர் நலன் காக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அரசியல் காழ்புணர்ச்சியோடு அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசுக்கு கண்டனம் போன்ற 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கட்டபொம்மன் பிறந்த இடத்தில் தான் எட்டபனும் பிறக்கிறார் என்று ஓபிஎஸ்-ஸை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.

Panneerselvam

மேலும் இந்த கூட்டத்தில் "புரட்சி தலைமகன் எடப்பாடி" என எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் புதிய பெயர் சூட்டினர். இந்நிலையில், பொதுகுழுவிற்கு தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஒ.பி.எஸுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.  கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற முயற்சியுங்கள், ஜனநாயகத்தில் பெரும்பான்மை தான் மேலோங்கி இருக்கும். அதை விடுத்து நீதிமன்றத்தை கருவியாக பயன்படுத்த முயற்சி செய்கிறீர்கள் என காட்டமாக கூறியுள்ளது. இந்நிலையில் அதிமுக அலுவலகத்தில் புகுந்து தொண்டர்களை தாக்கியதாகவும், ஆவணங்களை திருடியாதாகவும் ஓபிஎஸ் மீது ராயப்பேட்டை காவல்நிலையத்தில் இபிஎஸ் தரப்பினர் புகார் அளித்துள்ளனர்.  கடந்த மாதம் ஓபிஎஸ்க்கு சாதகமான சூழல் நிலவி வந்த நிலையில், தற்போது அடுத்தடுத்து அடி விழுந்துள்ளது.  அடுத்ததாக என்ன செய்யப்போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க | அதிமுக அலுவலகத்தில் தொடர்ந்து பதற்றம்! கற்களை வீசி தாக்குதல்!

 

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News