பையனூரில் அமைக்கப்பட்டுள்ள MGR நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்துவைத்தார்!
காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் அமைக்கப்பட்டுள்ள MGR நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்துவைத்தார்.
மாமல்லபுரம் அருகே பையனூரில் தமிழக அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளத 65 ஏக்கர் நிலத்தில், 15 ஏக்கரில் பிரம்மாண்டமான படப்பிடிப்புத் தளம் கட்டமைக்கப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் படப்பிடிப்பு தளமானது இந்தியாவிலேயே மிக உயரமானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
56 அடி உயரத்தில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்தப் படப்பிடிப்புத் தளத்தினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று திறந்து வைத்தார். இந்த படபிடிப்பு தளத்ததில் ஒரே நேரத்தில் பல படங்களின் படபிடிப்பு காட்சிகளை நடத்தும் அளவிற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது.
மேலும் நலிவடைந்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வின் போது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, பாண்டியரஜன், நடிகர் சங்க நிர்வாகிகள் விஷால், நாசர், பொண்வண்ணன், கார்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.