உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சொத்தை முடக்கியதற்கு ஏன்... அமலாக்கத்துறையின் விளக்கம் இதோ!

ED Seizes Udhayanidhi Stalin Foundation Assets: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் அசையா சொத்துகளையும், வங்கி கணக்கில் இருந்த பணத்தையும் முடக்கியுள்ளது குறித்து அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : May 27, 2023, 06:25 PM IST
  • ரூ. 36. 3 கோடி அளிவிலான அசையா சொத்துக்களும் முடக்கம்.
  • வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 34.7 லட்சம் முடக்கம்.
  • ஆனால், இவை தற்காலிக முடக்கம் எனவும் விளக்கம்.
உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சொத்தை முடக்கியதற்கு ஏன்... அமலாக்கத்துறையின் விளக்கம் இதோ! title=

ED Seizes Udhayanidhi Stalin Assets: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரிடப்பட்ட அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 34.7 லட்சத்தை அமலாக்க இயக்குநரகம் முடக்கியுள்ளது. அதுமட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள ரூ.36.3 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை இன்று தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறை அறிக்கை

இங்கிலாந்தைச் சேர்ந்த லைகா குழுமத்தின் துணை நிறுவனமான கல்லால் குழுமம் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகள் சரவணன் பழனியப்பன், விஜய்குமரன், அரவிந்த் ராஜ் மற்றும் விஜய் ஆனந்த், லட்சுமி முத்துராமன் மற்றும் ப்ரீத்தா விஜயானந்த் ஆகியோர் மீது புகார் அளித்ததை அடுத்து, இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், சென்னை மத்திய குற்றப்பிரிவு, பதிவு செய்த எஃப்ஐஆர் அடிப்படையில் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக அமலாக்கத்துறை தனது அறிக்கையில் தெரிவித்தது. 

மேலும் படிக்க | குழந்தை திருமண விவகாரம்: வசமாக சிக்கிய போட்டோ ஆதாரங்கள் - அதிரவைத்த திடுக்கிடும் தகவல்கள்..!

ரூ. 300 கோடி மோசடி

கல்லால் குழுமம் மற்றும் அதன் நிறுவனங்களுக்கு லைகா குழுமம் மற்ற முதலீடுகள் மற்றும் கடன்களை செய்திருப்பதால், இந்த மோசடி உண்மையில் ரூ.300 கோடி மதிப்பில் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 

கடந்த வாரம் ரெய்டு

விசாரணையின் ஒரு பகுதியாக, குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் புகார்தாரர் ஆகிய இருவருடனும் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் சொந்த இடங்களில் அமலாக்கத்துறை கடந்த வாரம் சோதனை நடத்தியது. அதில், ஆவணங்கள், சொத்துக்கள், சந்தேகத்திற்கிடமான பணம் மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகள் போன்ற ஆதாரங்களைக் கண்டறிந்தது. இவை அனைத்தும் இன்னும் விசாரணையில் உள்ளன, என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சொத்துகள் முடக்கம்

இதற்கிடையில், குற்றச்செயல்களின் ஒரு பகுதியைப் பாதுகாப்பதற்காக, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியுள்ளது. அதன் மதிப்பு ரூ.36.3 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 25ஆம் தேதி அன்று உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சத்தையும் முடக்கியுள்ளது. 

ஏன் முடக்கம்?

லைகா நிறுவனம் தொடர்பான இந்த வழக்கில் ரூ.300 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அவர்களிடம் பெற்ற ரூ.1 கோடிக்கான விவரங்களைத் தர அறக்கட்டளையின் உறுப்பினர்கள் தவறியதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. மேலும், விளக்கமளிக்காத காரணத்தால் இது தற்காலிகமான முடக்கம் மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | பொதுநலனுக்கு பயன்படும் புரட்சிகரமான செயலி:சமூக ஆர்வலர் ஏ. நாகராஜ் அறிமுகம் செய்து வைத்தார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News