கோவை கருமத்தம்பட்டியில் என் மண் என் மக்கள் யாத்திரைக்கு 2 மணி நேரம் தாமதமாக வந்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முதியவர் ஒருவர் கை கொடுக்க முயன்ற போது மத்திய ரிசர்வ் போலீஸ் அவரை தள்ளிவிட்ட சம்பவம் அங்கிருந்தவர்களிடையே முகம் சுளிக்க வைத்தது. என் முன் என் மக்கள் யாத்திரையின் 45 வது நாளான நேற்று, தமிழக பாஜக தலைவர் கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருமத்தம்பட்டி பகுதியில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வாகன பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு சுமார் 2 மணி நேரம் தாமதமாக வந்த அண்ணாமலையை பாஜக தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது முதியவர் ஒருவர் அண்ணாமலைக்கு கைகொடுக்க முயன்றார். இதனை கவனித்த அண்ணாமலைக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மதிய ரிசர்வ் போலீஸ் அதிகாரி, உடனடியாக முதியவரை தள்ளிவிட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இது அங்கிருந்த பாஜக தொண்டர்களிடையே முகம் சுளிக்க வைத்தது.
மேலும் படிக்க | வெள்ளியங்கிரி FPO-க்கு தேசிய விருது வழங்கி கெளரவிப்பு..! சத்குரு வாழ்த்து
பிரச்சார வாகனத்துடன் பயணித்த தொண்டர்கள் சிலர், வழியில் இருந்த டாஸ்மாக் கடையை பார்த்ததும் ஒருவர் பின் ஒருவராக கடைக்குள் சென்று வந்தனர். வாகன பிரச்சார பயணம் இரவு 10.30 மணியளவில் சோமனூர் பேருந்து நிலையம் வந்தடைந்தது. அங்கு குழுமியிருந்த பாஜக தொண்டர்களிடையே உரையை தொடங்கிய அண்ணாமலை, 11.30 மணி வரை பேச்சை நிறுத்தவில்லை. இதனால் பொறுமை இழந்த போலீசார் பிரச்சார வாகனத்தின் அருகே சென்று அடிக்கடி நேரம் கடந்து விட்டதை நினைவூட்டினர். ஒரு வழியாக இரவு 11.45 மணிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். கருமத்தம்பட்டி பகுதியில் அண்ணாமலையின் பிரச்சார பயணத்துக்காக பாஜகவினரால் வைக்கப்பட்ட பேனர் ஒன்றில் திமுக தலைவர்கள் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களுடன் இன்பநிதியின் புகைப்படமும் இடம்பெற்றிருந்நது. மேலும் குடும்பத்தில் உள்ள ஒருவர் நாட்டுக்காக உழைத்தால் தேசிய மாடல், ஒரு குடும்பத்துக்காக நாடே உழைத்தால் அது திராவிட மாடல் என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
இனி அண்ணாமலை போடுகிற பால் எல்லாம் விக்கெட் என்ற வாசகங்கள் இடம்பெற்று இருந்த மற்றொரு பேனரில் திமுக, அதிமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் கொடிகளில் உள்ள வண்ணங்களை எழுத்துகளுக்கு பயன்படுத்தி இருந்தனர். பாஜக தொண்டர்கள் மற்றும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்த இந்த பேனர்கள் குறித்த புகைப்படங்கள் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் விரைவில் அரசியல் மாற்றம் வரும் இந்தியாவில் எங்கும் இல்லாத ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அலுவலகம் தொடங்கி தாசில்தார் அலுவலகம் வரை ஊழல் மிகுந்து காணப்படுகிறது தமிழக மின்சார துறையில் வழிப்பறி நடைபெற்று வருகிறது . விசைத்தறியாளர்கள் மின்சாரத்தை பயன்படுத்தும் முக்கிய நேரங்களில் மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளது.
தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியதை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் மகளிர்க்கு உரிமை தொகை கொடுப்பது போல ஒத்தையில் கொடுத்து கத்தையாக தமிழக அரசு கொள்ளையடித்து வருகிறது திருப்பதி கோயிலுக்கு பூட்டு போடுவது எதற்கு என்று கேட்டால் அதனை திமுக காரர்கள் விமர்சிப்பார்கள் உண்மையில் அதில் கை வைப்பவர்கள் திமுக காரர்கள் மட்டுமே இந்து சமய அறநிலையத்துறையில் அனைத்து சட்டங்களையும் நடைமுறைகளையும் மாற்றியுள்ளனர். இரண்டு லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் எங்கு போனது என்று தெரியவில்லை. திரைத்துறையை கையில் வைத்துக்கொண்டு கருப்பு பணங்களை வெள்ளையாகி வருகிறது தமிழக அரசு என்று பேசியுள்ளார்.
மேலும் படிக்க | மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ