காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கும் மே 19 இடைத்தேர்தல்!

தமிழக காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு வரும் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேரத்ல் ஆணையம் அறிவித்துள்ளது!

Last Updated : Apr 9, 2019, 05:50 PM IST
காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கும் மே 19 இடைத்தேர்தல்! title=

தமிழக காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு வரும் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேரத்ல் ஆணையம் அறிவித்துள்ளது!

வரும் மக்களவை தேர்தலுடன் தமிழ்நாட்டில், தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு வரும் 18-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

இதே தேதியில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில்,  திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு வரும் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

--- 4 தொகுதி இடைத்தேர்தல் --- 

  • வேட்பு மனுதாக்கல் தொடக்கம் - ஏப்ரல் 22-ம் தேதி - 
  • வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் - ஏப்ரல் 29-ம் தேதி
  • வேட்புமனு பரிசீலனை நிறைவடையும் நாள் -  ஏப்ரல் 30-ம் தேதி
  • வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் - மே 2ம் தேதி

மேற்கண்ட நான்கு தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை மக்களவை தேர்தல் மற்றும் தமிழகத்தின் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளுடன் சேர்த்து வரும் மே 23-ஆம் தேதி நடத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

Trending News