மதுரை காளவாசல் சாலை சந்திப்பில் 4 வழித்தடை மேம்பால பணிக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினர்!!
மதுரை மாவட்டம் காளவாசல் பகுதியில் 4 வழித்தடை மேம்பாலம் அமைப்பதற்கான திட்டங்களை வகுத்தனர். இதையடுத்து, மேம்பால பணிக்கு இன்று அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை மதுரை வைத்தார். இவர் வருகையால் மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.
இதையடுத்து, இன்று காலை 4 வழித்தடை மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய முதல்வர்; மதுரை மக்களின் நீண்டகால கனவை அதிமுக அரசு நிறைவேற்றி தந்துள்ளது. காளவாசலில் மேம்பாலம் அமைவதால் போக்குவரத்துநெரிசல் குறையும் என்றும் வைகை ஆற்றில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என கூறியதோடு கோரிப்பாளையம் சந்திப்பிலும் மேம்பாலும் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு அரசு விழாக்களில் கலந்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.