பா.ம.க சார்பில் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களின் பக்ரீத் திருநாள் வாழ்த்து!

மனிதநேயத் திருநாள்  பக்ரீத்  திருநாளை கொண்டாடும்  இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள்...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 31, 2020, 11:28 AM IST
பா.ம.க சார்பில் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களின் பக்ரீத் திருநாள் வாழ்த்து! title=

புதுடெல்லி: மனிதநேயத் திருநாளாம்  பக்ரீத்  திருநாளை கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள சிறப்பு அறிக்கை இது...

இஸ்லாமிய இறைதூதர்களில் ஒருவரான இப்ராகிம் நெடுநாட்களுக்கு பிறகு தமக்கு பிறந்த மகன் இஸ்மாயிலை கனவில் கிடைத்த இறைவனின் கட்டளையை மதித்து உயிர்ப்பலி கொடுக்கத் துணிந்தார். தமக்காக மகனையே தியாகம் செய்யத் துணிந்த இறைதூதரை எண்ணி வியந்த இறைவன், உடனடியாக வானவரை அனுப்பி இஸ்மாயில் பலிகொடுக்கப்படும் நிகழ்வை தடுத்து நிறுத்தியதுடன், அதற்குப் பதிலாக ஆட்டைக் கொடுத்து பலியிடும்படி கேட்டுக் கொண்டார். இறைதூதர் இப்ராகிமின் தியாக உள்ளத்தைப் பாராட்டும் விதமாகவே உலகம் முழுவதும் பக்ரீத் கொண்டாடப்பட்டு வருகிறது. இது திருவிழா மட்டுமல்ல... இறைபக்தியை நினைவூட்டும் நாளும் கூட.

இஸ்லாமியர்கள் அனைவருமே இப்ராகிம்கள் தான். இறைபக்திக்காக எந்த தியாகத்தையும் செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அதை ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத் திருநாளின் போது தங்களிடம்  இருப்பதை பிறருக்கு ஈந்து தங்களின் ஈகை குணத்தையும், மனிதநேயத்தையும் வெளிப்படுத்துகிறார்கள்.

 பக்ரீத் திருநாள் நமக்கு இன்னொரு பாடத்தையும் சொல்கிறது. மாற்றுத்திறனாளிகளை மதிக்க வேண்டும்; அவர்களுக்கு உதவ வேண்டும் என்பது தான் பக்ரீத் சொல்லும் பாடம் ஆகும். அந்த பாடத்தை உணர்ந்து இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, அனைத்து மதத்தினரும் மாற்றுத்திறனாளிகளை நமது குடும்பத்தில் ஒருவராக நினைத்து மதிக்கவும், உதவவும்  இந்த நன்னாளில்  சபதம் ஏற்போம்.

Trending News