திமுகவை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் உயிரிழந்த நிலையில், நாளை நடைபெறவிருந்த நிலையில், அக்கட்சி எம்பிக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது!!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை நடக்கவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2 நாளில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மறைந்ததை தொடர்ந்து திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்தானது. சென்னை அப்போலோ மருத்துவமனையில், குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடல் நலக்குறைவால் காலமானார்.திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி இறந்த மறுநாளிலேயே காத்தவராயனும் காலமாகி உள்ளார். கடந்த 2 நாளில் 2 திமுக எம்எல்ஏக்கள் உயிரிழந்ததால் சட்டப்பேரவையில் திமுக பலம் 98 ஆக குறைந்துள்ளது.
பிப்ரவரி 27 ஆம் தேதியான நேற்று திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இந்த நிலையில் இன்று மற்றொரு திமுக எம்எஏல்வான காத்தவராயன் உடல்நலக்குறைவினால் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவங்கள் திமுகவினருடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து இரண்டு எம்எல்ஏக்கள் உயிரிழந்துள்ளதால் தற்பொழுது சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 98 ஆக குறைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், நாளை திட்டமிட்டபடி அண்ணா அறிவாலயத்தில், திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவது சரியாக இருக்காது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கருதினார். எனவே நாளை நடைபெறவிருந்த கூட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். பின்னொரு நாளில், ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.