'காலையில் கண்டிப்பு,மாலையில் மன்னிப்பு' - திமுக நிர்வாகி அடித்த அந்தர் பல்டி!

ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவரை அவதூறாகப் பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட திமுக பிரமுகர் மீது கடலாடி காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 12, 2022, 10:45 PM IST
  • திமுக IT Wing செயலாளர் நாகேந்திரன் என்பவர் சமூக வளைதளங்களில் அநாகரிகமாக பேசினார்.
  • திமுகவைச் சேர்ந்த நாகேந்திரன் பாஜக மாவட்ட தலைவரிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ பதிவிட்டுள்ளார்.
'காலையில் கண்டிப்பு,மாலையில் மன்னிப்பு' - திமுக நிர்வாகி அடித்த அந்தர் பல்டி! title=

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியத்தை சேர்ந்த திமுக முன்னாள் ஒன்றிய செயலாளராக இருந்த இ.எம்.டி கதிரவன் என்பவர் திமுகவில் இருந்து விலகி கடந்த ஓராண்டிற்கு முன்னர் பாஜகவில் இணைந்தார்.

தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜகவின் மாவட்ட தலைவராக அக்கட்சித் தலைமையால் நியமிக்கப்பட்டுள்ளார்.

BJP

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத கமுதி அருகே உள்ள கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்த திமுக IT Wing செயலாளர் நாகேந்திரன் என்பவர் சமூக வளைதளங்களில்  அநாகரிகமாக பேசி உள்ளார்.

மேலும் படிக்க | ஓடுதளத்தில் இருந்து விலகிச் சென்று தீப்பிடித்த விமானம்!..40 பேர் காயம்

மேலும் இதுதொடர்பாக திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடலாடி , கமுதி , அபிராமம் உள்ளிட்ட காவல்நிலையங்களில்  பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் புகார் மனு அளித்துள்ளனர்.

BJP

மேலும் கமுதி காவல் நிலையத்திற்கு ஆய்வுக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து பாஜகவினரின் தொடர் நடவடிக்கைகளால் திமுகவைச் சேர்ந்த நாகேந்திரன் பாஜக மாவட்ட தலைவரிடம் மன்னிப்பு கேட்டு சமூக வலைதளங்களில் மற்றொரு வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டு அந்தர் பல்டி அடித்துள்ளார்  என்பது கேலிக்குறியான விசயமாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | வீட்டு விலை எப்ப இப்படி குறைஞ்சது: 200 ரூபாய்க்கு பங்களா வீடு தர தயாராகும் நாடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News