ஜிப்மரில் இந்தி கட்டாயம்....திமுக, மதிமுக ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் ஆவணங்கள் எதிர்காலத்தில் இந்தியில் மட்டுமே இருக்க வேண்டுமென்ற உத்தரவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுகவும், மதிமுகவும் அறிவித்துள்ளன.

Written by - Chithira Rekha | Last Updated : May 8, 2022, 06:02 PM IST
  • இந்தியில் மட்டுமே ஆவணங்கள்
  • புதுச்சேரி ஜிப்மர் இயக்குநர் உத்தரவுக்கு எதிர்ப்பு
  • திமுக, மதிமுக ஆர்ப்பாட்டம்
ஜிப்மரில் இந்தி கட்டாயம்....திமுக, மதிமுக ஆர்ப்பாட்டம் title=

புதுச்சேரி ஜிப்மர் இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஜிப்மர் அலுவலகக் கோப்புகள் அனைத்தையும், எதிர்காலத்தில் இந்தியில் மட்டுமே எழுத வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Jipmer Circular

மேலும் படிக்க | இந்தி தேசிய மொழி என கூறுவது தவறாகும்: விளாசிய நடிகை மதுபாலா

இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக எம்.பி. கனிமொழி, ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? ஒன்றிய அரசு திணிக்க முயலும் இந்தி வேலையில்லா திண்டாட்டத்தைத் தீர்க்குமா? சமத்துவமின்மை மாறுமா? ஏதேனும் ஒரு சமூகப் பிரச்சனையையாவது திருத்துமா? விரிசல்களை ஆழப்படுத்துவது நல்லதில்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தரமான சிகிச்சை அளிப்பதில் புகழ் பெற்று இருந்த ஜிப்மர் நிர்வாகம் தற்போது கீழ்த்தரமான அரசியல் செய்து வருவதாகவும்,  இந்தித் திணிப்பு என்பது தரமான சிகிச்சையை கேள்விக்குறியாக்கும் எனவும் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தெரிவித்துள்ளார். எனவே இந்தித் திணிப்பை கைவிட வேண்டும், புதுச்சேரி மக்களை புறக்கணிக்காமல் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தில் தரமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை காலை 9.30 மணியளவில் ஜிப்மர் மருத்துவமனை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுமென திமுக அறிவித்துள்ளது.

எந்த வழியில் நுழைய முயற்சித்தாலும் இந்தியை விரட்டியடித்து தமிழைக் காக்க வேண்டியது தமிழரின் கடமை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும், அந்த இயக்குநரை இந்தி பேசும் மாநிலத்திற்குப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 10-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில், புதுவை ஜிப்மர் நுழைவாயில் முன்பு மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் வைகோ அறிவித்துள்ளார். 

மேலும் படிக்க | தமிழர்கள் ஏன் இந்தி பேச வேண்டும்?..சோனு நிகம் கேள்வி

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News