நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 10வது பட்ஜெட் யாருக்கும் 'பத்தாத பட்ஜெட்' என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்!!
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், தமிழக மக்களுக்கு பயனளிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை துணை முதலவர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார். அதில், ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்கு ரூ.4,109.53 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாக துணை முதலவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 10வது பட்ஜெட் யாருக்கும் 'பத்தாத பட்ஜெட்' என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைடம் ஸ்டாலின் கூறுகையில்.... தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 10வது பட்ஜெட் யாருக்கும் 'பத்தாத பட்ஜெட்' ஆகவே காணப்படுகிறது. தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 196 நிமிடங்கள் வாசித்துள்ளார். முன்னதாக, மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 159 நிமிடங்கள் வாசித்தார், இதிலிருந்தே தெரிகிறது.
நிதிநிலை அறிக்கை 3 ஆம் பக்கத்தில் இருக்கும் ஒரு தகவலை நிதியமைச்சர் படிக்கிறார். அதாவது, 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இந்த அரசின் ஆட்சி நீடிக்காது; ஆட்சி மாறிவிடும் என்றெல்லாம் கூறுகின்றனர்' என்று வாசித்திருக்கிறார். இதன்மூலம் ஆட்சி செய்ய முடியாது என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
அவர்தான் தற்போதைய அதிமுக அரசை கலைக்க வேண்டும் என்று தியானம் செய்தார், நீதிமன்றம் சென்றார். எனவே, அவருடைய 10வது பட்ஜெட் யாருக்கும் பத்தாத, எதற்கும் பத்தாத பட்ஜெட் ஆக இருக்கிறது இது அதிமுக ஆட்சியின் கடைசி நிதிநிலை அறிக்கையாக இருக்கும். அதிமுக அரசில் நிதி, வருவாய் பற்றாக்குறை, கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
திமுக ஆட்சியில் இருக்கும்போது கடன் சுமை ரூ. 1 லட்சம் கோடி. தற்போது அதிமுக அரசில் இது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது ஒரு மனிதனின் கணக்கில் 57,000 ரூபாய் என்ற அளவில் கடன் சுமை இருக்கிறது. அதுமட்டுமின்றி, அதிமுக அரசில் தலைமைச் செயலகம் முதல் கிராம நிர்வாக அலுவலகம் வரை ஊழல், லஞ்சம் மூழ்கியிருக்கிறது.
இந்த பட்ஜெட்டில் எந்த தொலைநோக்குத் திட்டமும் வளர்ச்சித் திட்டமும் இல்லை. அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி மற்றும் முதல்வரின் இலக்காக்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அது ஏன் என்று தெரியவில்லை. டெலடா பகுதிகளை பாதுகாக்கப்பட சிறப்பு வேளாண் மண்டலமாக வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு' என்று பேசினார்.
மேலும், வேளாண் மண்டலம் வேண்டும் என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதற்கான கடிதத்தை கொடுத்து முதல்வர் மீன்வழத்துறை அமைச்சர் ஜெயகுமாரை டெல்லிக்கு அனுப்பிவைத்துள்ளார். அந்த கடிதத்தில் என்ன உள்ளது என்பதை இன்ரூ மாலைக்குள் அனைவருக்கும் தெரிவிக்கவேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.